குடும்பத்தை பிரித்தேனா... பொய்யான குற்றச்சாட்டு : மகளுடன் சேர்ந்து வாழ ரவி மோகனுக்கு மாமியார் கோரிக்கை | மே 24ல் ஜப்பானில் ரிலீஸ் ஆகும் டூரிஸ்ட் பேமிலி | புதிய படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த தமன்னா! | சிரஞ்சீவியின் 157-வது படத்தில் இணைந்த நயன்தாரா : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | டிடி நெக்ஸ்ட் லெவல், மாமன் படங்களின் முதல் நாள் வசூல் நிலவரம் என்ன? | என்னை சுயநலத்துக்காக பயன்படுத்துபவர்கள் இன்னும் நல்லா பயன்படுத்திகோங்க : விஜய் சேதுபதி | ஒரு மாதமாக காதல்... 4 மாதத்தில் திருமணம் : விஷால் சொல்கிறார் | பிளாஷ்பேக்: ஆட்டோ சங்கரை உருவாக்கிய படம் | பிளாஷ்பேக்: 75 ஆண்டுகளுக்கு முன்பே நெருக்கமான காட்சிகள் நீக்கம் | நடிகையின் நகைகளை திருடியவர் கைது: ரூ.23 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்பு |
ஒரு படத்தின் சண்டை காட்சிகளில் அதிக வன்முறை இருந்தால், காதல் காட்சிகள் அல்லது படுக்கை அறை காட்சிகள் வரம்பு மீறி இருந்தால் அதனை தணிக்கை குழுவினர் நீக்கச் சொல்வார்கள், அல்லது குறிப்பிட்ட பகுதியை வெட்டி நீளத்தை குறைக்கச் சொல்வார்கள். இது 75 ஆண்டுகளுக்கு முன்பே நடந்திருக்கிறது.
1949ம் ஆண்டு 'மாயாவதி' என்ற படம் வெளிவந்தது. இது கணபதி பிக்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்பட்டது. டி.ஆர்.சுந்தரம் இயக்கினார். டி.ஆர். மகாலிங்கம், அஞ்சலிதேவி, எஸ்.வி. சுப்பையா, காளி என்.ரத்தினம், சி.டி. ராஜகாந்தம், கே.கே. பெருமாள், எம்.ஜி. சக்ரபாணி, எம்.இ.மாதவன், அ.கருணாநிதி மற்றும் நாராயண பிள்ளை ஆகியோர் நடித்தனர். ஜி. ராமநாதன் இசையமைத்துள்ளார். திருவிதாங்கூர் சகோதரிகள் லலிதா மற்றும் பத்மினி நடனமாடினார்கள்.
ஒரு மன்னன் தனது மகளை மகிழ்விக்க வெள்ளி மீன்கள் மற்றும் பூக்களால் ஒரு அழகான ஏரியை உருவாக்குகிறார். அங்கு தனது பொழுதை மகிழ்ச்சியாக களிக்கிறாள் இளவரசி. அங்கு யதேச்சையாக வரும் ஒரு இளவரசனை அவள் காதலிக்கிறாள். ஆனால் அவனுக்கோ பெண்கள் என்றாலே பிடிக்காது. அதனால் இளவரசியின் காதலை நிராகரிக்கிறார். 'உன்னை காதலித்து காட்டுகிறேன் பார்' என்று இளவரசி சவால் விடுகிறாள். அந்த சவாலில் இளவரசி ஜெயித்தாளா என்பதே கதை.
இளவரசனை மயக்குவதற்காக இளவரசி சில காம லீலைகளை அரங்கேற்றுவார். இது மிக சாதாரண காட்சிதான். ஆனால் அன்றைக்கு அது நெருக்கமான ஆபாச காட்சியாக கருதப்பட்டு சில காட்சிகள் நீக்க வேண்டும், என்றும் சில காட்சிகளின் நீளத்தை குறைக்க வேண்டும் என்றும் தணிக்கை குழு உத்தரவிட்டது. அதை செய்தபிறகே படமும் வெளியானது. என்றாலும் படம் உரிய வரவேற்பை பெறவில்லை.