ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
இப்போதெல்லாம் விஷாலின் படங்களை விட அவரைப் பற்றிய செய்திகள்தான் அதிகமாக வருகிறது. அவர் எங்கு சென்றாலும், எதை செய்தாலும் பரபரப்பாகிறார். பட விழாவில் ஏற்பட்ட கை நடுக்கம், கூவாகம் விழாவில் மயங்கியது என அடுத்தடுத்து உடல்நல பாதிப்பு சர்ச்சையில் சிக்கினார். இந்த நிலையில் தான் ஒரு மாதமாக காதலித்து வருவதாகவும் நான்கு மாதத்திற்குள் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நடிகர் சங்க கட்டிடம் தான் என் கனவு. அதனால் தான் கட்டிடம் கட்டப்பட்ட பின்னரே எனக்கு திருமணம் என்று அறிவித்தேன். வெறும் வாய் வார்த்தைக்காக மட்டும் இதை சொல்லவில்லை. ஒரு சவாலாக எடுத்துக் கொண்டேன். 3 ஆண்டுகளில் முடிந்துவிடும் என்று நினைத்தேன். ஆனால் 9 ஆண்டுகள் தாண்டிவிட்டது.
நடிகர் சங்க கட்டிடம் முழுமையடையும் நிலையில் இருக்கிறது. ஆகஸ்ட் 15ம் தேதி நடிகர் சங்க கட்டிடத்தை திறக்க திட்டமிட்டுள்ளோம். அனேகமாக ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் எனக்கு திருமணம் உறுதியாக நடக்கும். என் பிறந்தநாளான ஆகஸ்ட் 29ம் தேதி கூட எனக்கு திருமணம் நடைபெறலாம். எப்படி பார்த்தாலும் இன்னும் 4 மாதத்தில் எனக்கு திருமணம் நடக்கும்.
நான் திருமணம் செய்யப்போகும் பெண் யார் என்பதை நேரம் வரும்போது சொல்கிறேன். ஒரு மாதமாகத்தான் அந்த பெண்ணை காதலித்து வருகிறேன். விரைவில் நல்ல தகவல் சொல்கிறேன். பெண் பார்த்து விட்டோம். பேசி முடித்துவிட்டோம். காதல் திருமணம்தான்.
இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.