ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
ஆறுமுககுமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ருக்மினி நடித்துள்ள படம் ஏஸ். இப்பட நிகழ்ச்சியில் விஜய்சேதுபதி பேசியதாவது : வர்ணம் என்ற படத்தில் நடிக்க இந்த பட இயக்குனர் உதவினார். நீ என்ன செய்யப் போகிறாய் என என் அப்பா படுக்கையில் கவலைப்பட்டபோது, அந்த பட ஸ்டில்லை காண்பித்தேன். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் இருக்கவும் இவர் தான் காரணம். அந்த சமயத்தில் கிடைத்த உதவியை மறக்க மாட்டேன். இந்த படம் மலேசியாவில் அதிகம் எடுக்கப்பட்டது. அங்குள்ள மக்கள் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.
இந்த படத்தில் யோகிபாபு இரண்டாவது ஹீரோ மாதிரி நடித்து இருக்கிறார். அவர் என்னிடம் அடிக்கடி கதை சொல்கிறார். விரைவில் இயக்குனர் ஆக வேண்டும். அவர் குறித்து நெகட்டிவ் செய்தி வருகிறது. அது தவறு. அதேபோல் இயக்குனர் மிஷ்கின் கடும் உழைப்பாளி, புத்தகங்களுக்கு மத்தியில் தூங்குகிறார். அவர் மற்ற நல்ல படங்கள் ஓட வேண்டும் என்று மேடைகளில் பேசுகிறார். என்னுடைய கடைசி விவசாயி படத்தை கொண்டாடினார்.
மஹாராஜா, விடுதலை2 படங்களுக்கு பின் ஏஸ் வருகிறது. இதுவும் நல்ல கதை. சிலரை பார்த்தால் எனக்கு ரொம்ப பிடிக்கும். சிலரை பார்த்தாலே பிடிக்காது. அது ஏன் என்று தெரியவில்லை. இந்த பட டிரைலரில் சிவகார்த்திகேயன் பெயர் வருகிறது. ஒரு படம் யாரு மாதிரி இருக்கிறது என கேட்கப்பட அதுக்கு யோகிபாபு கொடுத்த கவுண்டர் அது. இன்னும் 2 ஹீரோ பெயரையும் சொன்னார். என்னை சுயநலத்துக்காக மற்றவர்கள் பயன்படுத்தினால், அவர்கள் இன்னும் நல்லா பயன்படுத்தி கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்
இவ்வாறு அவர் பேசினார்.