அதிக நேரம் ஓடும் படங்களில் 5வது இடம் பிடித்த 'குபேரா' | விஜய் சேதுபதி - பூரி ஜெகன்னாத் படத்திற்கு ஹிந்தியில் தலைப்பு? | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி |
தமிழ் சினிமா இசை என்பது காலங்கள் கடந்து நிற்கும் ஒரு இசையாக உள்ளது. கே.வி.மகாதேவன், எம்எஸ் விஸ்வநாதன், ராமமூர்த்தி, இளையராஜா, ஏஆர் ரஹ்மான் என இந்திய அளவில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர்களின் பாடல்களை மற்ற மொழி சினிமா ரசிகர்களும் கேட்டார்கள், கேட்டுக் கொண்டிருக்கிறார்கள், கேட்பார்கள்.
ஆனால், சமீபத்திய தமிழ் சினிமா இசையில் தமிழின் அழகு குறைந்து, கவிதை நயம் குறைந்து, ஆங்கிலக் கலப்புடன், மற்ற மொழிக் கலப்புடன் கூடிய பாடல்கள்தான் அதிகம் வருகிறது என சினிமா இசையை ஆத்மார்த்தமாக ரசிக்கும் பலரும் குறை சொல்வார்கள். இன்றைய இசையைமப்பாளர்களைக் கேட்டால் அதற்கு 'தலைமுறை இடைவெளி, டிரென்ட்' என ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி சமாளிப்பார்கள்.
பாலிவுட்டின் பிரபல இயக்குனரும், தமிழில் சில படங்களில் நடித்தவருமான அனுராக் காஷ்யப் இன்றைய தமிழ் சினிமா இசையைப் பற்றி சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
“தெலுங்கு பான் இந்தியா படங்களுடன் தமிழ் சினிமாவும் போட்டியிட விரும்புகிறது. தமிழ்ப் பாடல்கள் கூட ஆங்கிலத்தில் இருக்கின்றன. வெளிநாட்டில் உள்ள ராக் பேண்டு குழுவினர் தமிழுக்கு வந்து, 'ஐயாம் கமிங் பார் யு, ஐயாம் கன்னிங் பார் யு' என திடீரென பாட ஆரம்பித்துவிட்டார்கள். இது தமிழ் சினிமா இசை அல்ல. தமிழ் சினிமா பாடல்களை நாங்கள் ஹிந்தியில் வாங்கிய காலம் ஒன்று இருந்தது. ராஜா சார் முதல் மற்றவர்கள் வரை வாங்கியிருக்கிறோம். இப்போது அவை எனக்குப் புரியவில்லை,” என்று பேசியிருக்கிறார்.