பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், பிரதீப் ரங்கநாதன், கிரித்தி ஷெட்டி, எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' படம் செப்டம்பர் 18 வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை நடிகை நயன்தாரா மற்றும் லலித்குமார் இணைந்து தயாரித்துள்ளனர்.செப்டம்பர் 18ம் தேதி விக்னேஷ் சிவனின் பிறந்தநாள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
பிரதீப் ரங்கநாதன் நடித்து இந்த வருடம் பிப்ரவரி 21ம் தேதி வெளிவந்த 'டிராகன்' படம் பெரும் வெற்றி பெற்று 150 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. அவர் நடித்து வரும் மற்றொரு படமான 'டூயுட்' படம் தீபாவளிக்கு வெளியாகும் என இரு தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்கள். தற்போது 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' படத்தின் வெளியீட்டு அறிவிப்பும் வந்துள்ளது. ஆக, இந்த வருடத்தின் வெளியீட்டுப் பட்டியலில் பிரதீப் நாயகனாக நடித்துள்ள மூன்று படங்கள் இடம் பிடிக்க உள்ளன.
'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' வெளிவந்த ஒரு மாதத்திற்குள்ளாக 'டூயுட்' வர உள்ளது. இரண்டுமே வரவேற்பைப் பெற்று வெற்றிப் படமாக அமைந்தால் தமிழ் சினிமாவில் ஹாட்ரிக் வெற்றியுடன் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துவிடுவார் பிரதீப் ரங்கநாதன்.