மூன்றாவது தெலுங்குப் படத்தை முடித்த 'திருடன் போலீஸ்' இயக்குனர் | விஜய் சேதுபதி படத்தில் கன்னட நடிகர் துனியா விஜய் | பத்மபூஷன் விருது நாளில், விஜய் ரசிகர்கள் மீது அஜித் ரசிகர்கள் கோபம் | சர்வானந்த் ஜோடியாக இரண்டு இளம் நாயகிகள் | சமந்தா தயாரித்த சுபம் படம் மே 9ல் ரிலீஸ் | சர்ச்சையான பஹல்காம் தாக்குதல் அறிக்கை : விளக்கம் கொடுத்த விஜய் ஆண்டனி | ''எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் லாலேட்டா'' ; வெளிப்படையாகவே கோரிக்கை வைத்த '2018' பட இயக்குனர் | சிம்புவுக்கு ஜோடியாகும் கயாடு லோகர் | இரண்டாம் ராணி எலிசெபத்திற்கு பிறகு ராம்சரணுக்கு செல்லப்பிராணியால் கிடைத்த பெருமை | பத்மபூஷன் விருது : குடும்பத்துடன் டில்லியில் அஜித் |
அட்டகத்தி தினேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடிப்பில் 2014ல் வெளிவந்த படம் 'திருடன் போலீஸ்'. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற ஒரு படம். அப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் ராஜு. அதற்கு முன்னதாக பல வெற்றிப் படங்களில் விஷுவல் எபெக்ட்ஸ் சூப்பர்வைசர் ஆகப் பணியாற்றியவர்.
'திருடன் போலீஸ்' படத்திற்குப் பிறகு 2017ல் 'உள்குத்து' படத்தை இயக்கினார். அந்தப் படம் சரியாகப் போகவில்லை. அதன்பின் தெலுங்குப் பக்கம் போய்விட்டார். 'நினு வீடனி நீடனு நீ, நேநே நா' ஆகிய படங்களை இயக்கினார்.
மூன்றாவது தெலுங்குப் படமாக தற்போது 'சிங்கிள்' படத்தை இயக்கி முடித்துள்ளார். அல்லு அர்ஜுன் குடும்பத்திற்குச் சொந்தமான கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தில் ஸ்ரீவிஷ்ணு, கீத்திகா சர்மா, இவானா மற்றும் பலர் நடித்துள்ளனர். காதல், காமெடி படமாக உருவாகியுள்ள இப்படத்தை மே 9ம் தேதி வெளியிட உள்ளார்கள். இப்படத்தின் டிரைலரை சற்றுமுன் வெளியிட்டுள்ளார்கள்.