மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தபு நடிப்பதாக அறிவித்திருந்தார்கள். அதைத் தொடர்ந்து தற்போது கன்னட நடிகர் துனியா விஜய் நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்கள்.
கன்னட சினிமாவில் சிறிய வேடங்களில் நடிக்க ஆரம்பித்து 'துனியா' என்ற படத்தின் மூலம் பெரிய திருப்பத்தைப் பெற்றவர் நடிகர் விஜயகுமார். அதன்பின் 'துனியா' விஜய் என்றே கன்னட சினிமா ரசிகர்களால் அழைக்கப்படுபவர்.
சில சர்ச்சைகளிலும் அவ்வப்போது சிக்கியவர். குறிப்பாக 2016ம் வருடம் 'மஸ்தி குடி' என்ற படத்தின் சண்டைக் காட்சி படப்பிடிப்பு திப்பகொன்டனஹள்ளி அணையில் நடைபெற்றது. ஹெலிகாப்டரிலிருந்து அணைக்குள் குதித்த விஜய் மற்றும் இரண்டு ஸ்டன்ட் நடிகர்கள் நீரில் மூழ்கினர். குழுவினரால் விஜய் காப்பாற்றப்பட்டார். ஆனால், ஸ்டன்ட் நடிகர்களான அனில், உதய் இறந்து போயினர். அதன்பின் கன்னடத் திரையுலகில் விஜய்க்கும், அப்படத்தின் இயக்குனர், ஸ்டன்ட் மாஸ்டர் ஆகியோருக்குத் தடை விதிக்கப்பட்டது.
2017ல் படக்குழுவைச் சேர்ந்த பலர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. ஆனால், விஜய் மீது குற்றம் சாட்டப்படவில்லை. 2018ல் தனது நண்பரும், ஜிம் பயிற்சியாளரைத் தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
விமர்சகர்களால் பாராட்டப்பட்ட, சில விருதுகளைப் பெற்ற படங்களில் நடித்தவர் துனியா விஜய் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் துனியா விஜய்.