படம் இருக்குது, ஆனா இயக்குனர் இல்லை : இது கமல் தரப்பு விளக்கம் | பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் |

டாக்ஸிக், மண்ணாங்கட்டி சின்ஸ் 1960, டியர் ஸ்டூடன்ட்ஸ், மூக்குத்தி அம்மன் 2, ராக்காயி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. இந்த நிலையில், தெலுங்கில் அனில் ரவிபுடி இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் படத்தில் நயன்தாராவை அவருக்கு ஜோடியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த படத்தில் நடிப்பதற்கு 18 கோடி நயன்தாரா சம்பளம் கேட்டதாகவும் சம்பளத்தை குறைத்துக் கொள்ளுமாறு பேச்சுவார்த்தை நடப்பதாகவும் டோலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போது இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், 2026ம் ஆண்டு சங்கராந்திக்கு இப்படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளார்கள். மேலும் இந்த படத்தில் நயன்தாரா இணையும் பட்சத்தில் சைரா நரசிம்மரெட்டி, காட்பாதர் படங்களுக்கு பிறகு சிரஞ்சீவியுடன் அவர் இணையும் மூன்றாவது படம் இதுவாக இருக்கும்.




