'கருப்பு' வரான், வழி மறிக்காதீங்க...: ஆர்ஜே பாலாஜி கண்ணீருடன் வீடியோ | ஆதிக் ரவிச்சந்திரன், ஐஸ்வர்யா தம்பதிக்கு ஆண் குழந்தை | குழந்தை நட்சத்திரத்துக்கான விருதை குழந்தையுடன் வந்து வாங்குறாங்க: பேரரசு கிண்டல் | விஜய் மேனேஜர் குறித்து நடிகை ஓவியா அதிரடி பதிவு | டிமாண்டி காலனி 6 பாகங்கள் வரை வரும் : இயக்குனர் தகவல் | 'தி பாரடைஸ்' மறு படப்பிடிப்பா? : தயாரிப்பு தரப்பு மறுப்பு | ஜோதிகாவின் ஹிந்தி படம் 'சிஸ்டம்' : 22ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது | பிளாஷ்பேக் : 'அன்னக்கிளி'யை வெற்றிக் கிளியாக்கிய அந்த 3 டிக்கெட் | பிளாஷ்பேக் : தன் பாடல்களை கூட கேட்க முடியாமல் போன இசை அமைப்பாளர் | ஆர்த்தி ரவி குறித்து பேச கெனிஷாவுக்கு கோர்ட் தடை |

நடிகர் சூர்யா தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் அவரது 45வது படத்தில் நடித்து வருகிறார் .இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது எட்டியுள்ளது. இதைத்தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வாத்தி, லக்கி பாஸ்கர் ஆகிய படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். இதனை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இது சூர்யாவின் 46 படமாக உருவாகிறது.
ஏற்கனவே இதில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடிக்கிறார் என கூறப்பட்டது. இப்போது இதில் மற்றொரு கதாநாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் உடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு வருகின்ற மே 15ம் தேதி அன்று துவங்குகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகின்ற நாட்களில் வெளியாகும் என்கிறார்கள் .