சந்தானத்தின் ‛லவ் பைட்' | ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப்போகும் துல்கர் படம் | பிளாஷ்பேக் : போலீஸாக சில்க் ஸ்மிதா | பிளாஷ்பேக் : ஒற்றைக்காலில் நடித்தே உயிர் விட்டவர் | பாடல் சர்ச்சை : மகளிர் ஆணையம் முன்பு ஆஜராகி மன்னிப்பு கேட்ட நோரா பதேகி | சல்மான்கான் - நயன்தாரா படத்தின் டைட்டில் இதுதானா ? | கொல்லப்பட்ட விலங்கு நல ஆர்வலர் : கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட பார்வதி | திரிஷ்யம் 3 படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியானது | மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் : விஜய்க்கு ஆதரவாக திரையுலகினர் குரல் | 50வது நாளில் 'யூத்' |

நடிகர் தனுஷ் தற்போது 'இட்லி கடை' எனும் படத்தை இயக்கி, நடித்து வருகிறார். 'டான் பிக்சர்ஸ், வுன்டர்பார் பிலிம்ஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கின்றார்.
இந்த படத்தில் ராஜ் கிரண், சத்யராஜ், பார்த்திபன், அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர். இப்படம் இவ்வருடம் அக்டோபர் 1ம் தேதி அன்று திரைக்கு வருகிறது.
கடந்த சில நாட்களாக இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பாங்காக்கில் நடைபெற்று வந்தது. தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக அருண் விஜய் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனுஷூடன் இணைந்து எடுத்த போட்டோவுடன் பகிர்ந்துள்ளார்.