ஏழு வருட இடைவெளிக்கு பிறகு வெளியாகும் அனுஷ்கா சர்மாவின் படம் | இதயக்கனி, அன்புள்ள ரஜினிகாந்த், போர் தொழில் - ஞாயிறு திரைப்படங்கள் | ‛தளபதி கச்சேரி' பிளாஸ்ட் : ‛ஜனநாயகன்' முதல் பாடல் வெளியீடு | கோவா திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛அமரன்' | ஜெயிலர் 2 படத்தை பாலகிருஷ்ணா எதனால் நிராகரித்தார்? | சைபர் கிரைம் மோசடி - ருக்மணி வசந்த் எச்சரிக்கை செய்தி | 2026 பிப்ரவரியில் திரைக்கு வரும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு பாராட்டு விழா | உருவக்கேலியை ஏற்க முடியாது ; ஆதரித்தவர்களுக்கு நன்றி : கவுரி கஷன் அறிக்கை | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவை கதற வைத்த மோனிஷா உன்னி |

தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். அவர் நடிகர் ரஜினியின் நெருங்கிய நண்பரும், இயக்குனருமான நட்ராஜ் மகள் ரஜினியை கல்லூரியில் படித்த காலத்திலேயே காதலித்து வந்தார். இரு வீட்டார் சம்மதத்துடன் 2010ல் திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு ஆர்யன் என்ற மகனும் இருக்கிறார். 2018ல் விஷ்ணு விஷால், ரஜினி இருவரும் பிரிந்துவிட்டார்கள்.
அதன் பின் இந்திய பாட்மிண்டன் வீராங்கனையான ஹைதராபாத்தைச் சேர்ந்த ஜுவாலா கட்டாவை விஷ்ணு விஷால் காதலிக்க ஆரம்பித்தார். இருவருக்கும் 2021ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இன்று அவர்களின் நான்காவது திருமண நாள். இந்த நாளில் இருவருக்கும் பெண் குழந்தை பிறந்துள்ளது.
இது குறித்து விஷ்ணு விஷால், “எங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆர்யன் இப்போது மூத்த சகோதரர். இன்று எங்கள் 4வது திருமண ஆண்டு விழா. அதே நாளில் கடவுளின் இந்த பரிசை நாங்கள் வரவேற்கிறோம். உங்களது அன்பும், ஆசீர்வாதமும் தேவை,” என்று குறிப்பிட்டுள்ளார்.
ரசிகர்களும், பிரபலங்களும் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.