'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
1940களுக்கு முன்பு நடிகர்கள் இரட்டை சகோதரர்களாக நடித்திருக்கிறார்கள். 'உத்தம புத்திரன்' படத்தில் பி.யு.சின்னப்பா நடித்தார். ஆனால் நடிகை இரட்டை வேடத்தில் நடித்த முதல் படம் 'லட்சுமி விஜயம்'. பொன்முடி, மந்திரி குமாரி போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்ற மாதுரி தேவி இரட்டை வேடங்களில் நடித்தார். பொம்மன் இராணி இயக்கிய இந்த படத்தில் பி.எஸ்.கோவிந்தன், பந்துலு, சந்தானலட்சுமி, காளி என்.ரத்தினம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜி.ராமநாதன் இசை அமைத்திருந்தார், ஜி.ரங்கநாதன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
ஒரு ராஜாவுக்கு அமுதா, குமுதா என இரட்டை பெண் குழந்தைகள் பிறக்கிறார்கள். பிற்காலத்தில் ராஜ்யத்தை ஆளுவது யார் என்ற வாரிசு சண்டை வந்து விடக்கூடாது என்பதற்காக ஒரு குழந்தை அமுதாவை காட்டுக்கு அனுப்பி முனிவர்களை கொண்டு வளர்க்கிறார். குமுதா அரண்மனையில் வளர்க்கப்படுகிறார். ஆனால் உரிய பருவத்தில் இருவருக்கும் மோதல் உருவாகிறது. அது எப்படி அதன் முடிவு என்ன என்பதுதான் படத்தின் கதை.