10 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் தெறி | கிராமத்து கெட்டப்பில் வெளியான ஐஸ்வர்யா ராஜேஷின் ‛ஓ சுகுமாரி' முதல் பார்வை | கவர்ச்சி நடனம் ஆடிய ரஜிஷா விஜயன் | ஜனவரி 22ல் மலையாள திரையுலகம் வேலை நிறுத்தம் | அமிதாப் பச்சனை பார்க்க ஷாப்பிங் மாலில் நடந்த தள்ளுமுள்ளுவில் கண்ணாடி உடைப்பு : ரசிகர்கள் காயம் | சஞ்சய் தத்தை உண்மையிலேயே ஏமாற்றியது லியோவா ? ராஜா சாப்பா ? | பொங்கல் வெளியீட்டில் குதித்த ‛வா வாத்தியார்' | பொங்கலுக்கு மேலும் சில படங்கள் ரிலீஸ் | தமிழில் தடுமாற்றத்தில் 'தி ராஜா சாப்' | 'பராசக்தி'யில் இருக்கும் 'புறநானூறு'.... |

பின்னாளில் கவர்ச்சி நடிகையாகவும், கவர்ச்சி நடன நடிகையாகவும் மாறிய அனுராதா, ஆரம்ப காலகட்டங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். சிவாஜிக்கு ஜோடியாகவே நடித்துள்ளார்.
அவர் விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்த படம் 'மதுரை சூரன்'. இந்த படத்தை விஜயசந்தர் என்பவர் இயக்கி இருந்தார். சங்கர், கணேஷ் இசை அமைத்திருந்தனர். விஜயகாந்தின் ஹீரோயிசத்தை தூக்கி பிடிக்கும் வகையிலான கதை அமைப்போடு வெளிவந்த படம்.
இதில் விஜயகாந்த் பல கெட்அப் போட்டு நடித்தார். அனுராதா நடன மங்கையாகவும்,விஜயகாந்த் காதலியாகவும் நடித்தார். ராதாரவி வில்லனாக நடித்தார். ஆனால் படம் வெற்றி பெறவில்லை.