மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

கன்னடத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஜனநாயகன்'. இப்படம் அடுத்த ஆண்டு 2026 பொங்கலுக்குத்தான் வெளியாக உள்ளது.
ஆனால், கடந்த சில வாரங்களாகவே இப்படத்தின் வியாபாரம் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகின. ஓடிடி உரிமை, சாட்டிலைட் உரிமை இதுவரை இல்லாத அளவிற்கு விற்கப்பட்டதாகச் சொன்னார்கள்.
தமிழக வினியோக உரிமையை வாங்கவும் கடும் போட்டி நிலவி இருக்கிறது. தயாரிப்பு நிறுவனம் சொன்ன விலையை வாங்கப் பலர் தயாராக இல்லை. இதனிடையே, 'குட் பேட் அக்லி' படத்தைத் தமிழகத்தில் வெளியிட்ட வினியோகஸ்தரான ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இப்படத்தை வாங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் நடித்து வெளிவந்த படங்களில், இதுவரை இல்லாத அளவிற்கு இந்தப் படத்திற்கான உரிமை 100 கோடி வரை பேசப்பட்டு, 90 கோடி அளவில் முடிக்கப்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரத் தகவல். அவ்வளவு தொகையை லாபத்துடன் வசூல் செய்ய 200 கோடி வசூலைத் தாண்ட வேண்டும். விஜய் நடித்து இதற்கு முன்பு வெளியான 'தி கோட்' படத்தின் தமிழக உரிமையையும் ராகுல்தான் பெற்றிருந்தார். அதன் விலை 50 டூ 60 கோடி மட்டுமே என்பது தகவல்.