ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப்போகும் துல்கர் படம் | பிளாஷ்பேக் : போலீஸாக சில்க் ஸ்மிதா | பிளாஷ்பேக் : ஒற்றைக்காலில் நடித்தே உயிர் விட்டவர் | பாடல் சர்ச்சை : மகளிர் ஆணையம் முன்பு ஆஜராகி மன்னிப்பு கேட்ட நோரா பதேகி | சல்மான்கான் - நயன்தாரா படத்தின் டைட்டில் இதுதானா ? | கொல்லப்பட்ட விலங்கு நல ஆர்வலர் : கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட பார்வதி | திரிஷ்யம் 3 படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியானது | மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் : விஜய்க்கு ஆதரவாக திரையுலகினர் குரல் | 50வது நாளில் 'யூத்' | ‛மிஸ்டர் எக்ஸ்' பட இயக்குனருடன் இணையும் விக்ரம் |

தெலுங்கு இளம் நடிகரான நாகசைதன்யா சில மாதங்களுக்கு முன்பு நடிகை சோபிதா துலிபாலாவை மறுமணம் செய்து கொண்டார்.. இதனை தொடர்ந்து மீண்டும் தனது தொழிலில் மீண்டும் கவனம் செலுத்த துவங்கியுள்ள நாகசைதன்யா நடிப்பில் உருவான தண்டேல் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. ஓரளவு நல்ல வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது.
இதனைத் தொடர்ந்து தற்போது புதிதாக உருவாகி வரும் மாய சபா - சீசன் 1 என்கிற வெப் சீரிஸிலும் நடித்துள்ளார் நாகசைதன்யா. இந்த வெப் சீரிஸை தற்போது ராஜமவுலி - மகேஷ் பாபு இருவர் கூட்டணியில் உருவாகி வரும் படத்திற்கு வசனம் எழுதி வரும் வசனகர்த்தாவான தேவகட்டா இயக்கியுள்ளார். கிட்டத்தட்ட 400 நிமிடங்கள் ஓடும் விதமாக உருவாகியுள்ள இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் இந்த வெப் சீரிஸ் வெளியாகும் என தேவகட்டா கூறியுள்ளார். இதற்கு முன்னதாக நாகசைதன்யா 2023ல் விக்ரம் கே குமார் இயக்கத்தில் உருவான தூதா என்கிற வெப் சீரிஸில் முதன்முறையாக நடித்திருந்தார். அந்த வெப் சீரிஸ் மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஒரு பக்கம் திரைப்படம் இன்னொரு பக்கம் வெப்சீரிஸ் என இரண்டுக்கும் சம முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்துள்ளாராம் நாகசைதன்யா.