'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
'கர்ணன்' படத்திற்குப் பிறகு மாரி செல்வராஜ், தனுஷ் இணைய உள்ள புதிய படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. அது பற்றிய அறிவிப்பை ஏற்கெனவே வெளியிட்டுள்ளார்கள். அப்படத்தின் மற்றொரு அப்டேட்டை அதன் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நேற்று நடைபெற்ற 'சுமோ' படத்தின் நிகழ்ச்சியில் கொடுத்துள்ளார்.
“தனுஷ், மாரி செல்வராஜ், ஏஆர் ரஹ்மான் சேர்ந்து அந்தப் படம் பண்றாங்க. அந்தப் படத்துக்கு முன்னாடியே தனுஷ் சார் நடிக்க ஒரு படம் இருக்கிறது. அந்தப் படத்திற்குப் பிறகுதான் மாரி செல்வராஜ் படம் ஆரம்பமாக உள்ளது,” என்று அறிவித்துள்ளார்.
தனுஷின் 56வது படத்தைத்தான் மாரி செல்வராஜ் இயக்க உள்ளார். அதற்கு முன்பாக 'போர் தொழில்' இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்க உள்ள படத்தில் தனுஷ் நடிக்கப் போகிறார். அந்தப் படத்தைப் பற்றித்தான் நேற்று ஐசரி கணேஷ் குறிப்பிட்டுள்ளார். விரைவில் அதற்கான அறிவிப்புகள் வரலாம்.
'அமரன்' இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும் தனுஷ் நடிக்கப் போகிறார். அதற்கான அறிவிப்பும் சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்தது.