ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! | ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா | பிளாஷ்பேக்: இரட்டை சகோதரிகளாக நடித்த மாதுரி தேவி | ''பணம் கொட்டிக்கிடக்கு... எங்களுக்கு பணத்தாசை இல்லை'': ராயல்டி விவகாரத்தில் கங்கை அமரன் 'பளீச்' | புற்றுநோய் பாதிப்பு: உதவி கேட்கும் சூப்பர்குட் சுப்பிரமணி | தேங்கி கிடந்த 'சுமோ' ஏப்., 25ம் தேதி திரைக்கு வருகிறார் |
சோசியல் மீடியாவை எப்படி முறையாக பயன்படுத்த வேண்டும் என்கிற சிற்றறிவு கூட இல்லாத சில நபர்கள் உயிருடன் இருப்பவர்களையே இறந்து விட்டதாக கூறி பொய் செய்தி பரப்புவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். பல பிரபலங்களுக்கு இது போன்று நடந்துள்ளது. இந்த முறை அப்படி ஒரு பொய் தகவலில் மாட்டிக் கொண்டவர் பிரபல மலையாள பின்னணி பாடகர் வேணுகோபால்.
சில மாதங்களுக்கு முன்பு தான் இவர் இறந்து விட்டதாக ஒரு பொய் செய்தி பரவி அதை அவர் மறுத்த நிலையில், தற்போது மீண்டும் அதே போல அவர் இறந்து விட்டதாக ஒரு பொய் தகவலை சோசியல் மீடியாவில் சில விஷமிகள் பரப்பி உள்ளனர்.
தற்போது காஷ்மீர் பகுதியில் தனது மனைவியுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் வேணுகோபால். இவரது இறப்பு குறித்த இந்த பொய் செய்தியை அவரது நண்பர்கள் தங்களது வாட்ஸ் அப் குரூப்பில் அவருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
இதனை தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரே வருடத்தில் இரண்டு முறை இறப்பு தேடி வந்து விட்டதால் எனது எதிர்காலம் நிச்சயம் நன்றாகத்தான் இருக்கும். இப்போதைக்கு நான் சாக விரும்பவில்லை என்று ஊருக்கு வந்ததும் ஒரு பிரஸ்மீட் வைத்து சொல்லி விடவா ?” என்று விரத்தியுடன் கேட்டுள்ளார்.