சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

நடிகர் அர்ஜூனின் மூத்த மகள் ஐஸ்வர்யா சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி தற்போதும் நடித்து வருகிறார். இவர் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். தொடர்ந்து படங்களிலும் நடித்து வருகிறார்.
அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனாவுக்கு சினிமா மீது ஆர்வம் இல்லை. அவர் ஹேண்ட்பேக் தயாரிக்கும் தொழில் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த தொழில் ரீதியான நண்பராக அறிமுகமான இத்தாலி காதலரை மணக்க இருக்கிறார். இவர்கள் 13 வருடங்களாக காதலித்து வந்ததாகவும், இந்த காதல் இரு வீட்டாருக்கும் தெரியும் என்றும் கூறப்படுகிறது.
தற்போது இத்தாலியில் இவர்களது நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதில் நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர். அந்த புகைப்பபடங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
இதுபற்றி அஞ்சனா தனது வலைதளத்தில் போட்டோவுடன் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். அதேசமயம் மாப்பிள்ளையின் பெயரை அவர் வெளியிடவில்லை.




