'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
உலகின் மிகப்பெரிய இசை கோர்வையாக கருதப்படும் சிம்பொனி இசையை இளையராஜா நிகழ்த்தி சாதனை படைத்தார். தற்போது இளையராஜா போன்றே சிம்பொனி இசை அமைக்க இருக்கிறார் கணேஷ் பி.குமார்.
சென்னையைச் சேர்ந்த இவர் லண்டனின் டிரினிட்டி இசைக் கல்லூரியில் இசைத்துறை உரிமம் பெற்றவர். இவர் 'ரைஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள சிம்பொனியை ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் புகழ்பெற்ற செரிமோனியல் அரங்கில் வருகிற 27ம் தேதி அரங்கேற்றுகிறார். சிம்பொனியை அந்தோணி ஆர்மோர் வழி நடத்துகிறார்.
இதுகுறித்து கணேஷ் பி.குமார் கூறும்போது 'இந்த சிம்பொனியை 2020ம் ஆண்டில் திட்டமிட்டோம். கொரோனா காலம் வந்து விட்டதால் அப்போது அரங்கேற்ற முடியவில்லை. காலம் கனிந்து வந்திருப்பதால் இப்போது நடத்துகிறோம்" என்றார்.