விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
பிரபலங்கள் பொதுவெளியில் செல்லும்போது அல்லது சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது அவர்களின் அனுமதி இன்றியே அவர்களுடன் செல்பி எடுக்க பல ரசிகர்கள் முயற்சிப்பது இப்போதும் தொடர்ந்து வருகிறது. சிவக்குமார், பாலகிருஷ்ணா போன்ற நட்சத்திரங்கள் கோபத்தில் ரசிகர்களின் செல்போனை தட்டிவிட்ட நிகழ்வுகள் பெருமளவில் வைரல் ஆகின.
இந்த நிலையில் சமீபத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் விடுமுறைக்காக லண்டன் சென்றிருந்தபோது அங்கே தன்னை தொடர்ந்து வந்து வீடியோவில் படம் எடுக்க முயன்ற ரசிகர் ஒருவரின் செல்போனை பறிக்கும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் சமீபத்தில் வெளியானது. இதுகுறித்து அக்ஷய் குமாருக்கு பலரும் விமர்சனங்களை முன் வைத்தனர். சிலர் அந்த ரசிகர் செய்தது தவறு என்பது போலவும் கருத்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட அந்த ரசிகரே என்ன நடந்தது என்பது குறித்து ஒரு வீடியோவில் பேசியுள்ளார்.
“லண்டனில் நான் ஆக்ஸ்போர்டு தெருவில் உள்ள சிக்னலில் நின்று கொண்டிருந்தபோது அக்ஷய் குமாரை போலவே ஒருவர் நடந்து சென்றார். அவர் தானா என்பதை உறுதி செய்து கொள்வதற்காக நானும் அவரை பின் தொடர்ந்தேன். அப்படியே வீடியோ எடுக்கவும் துவங்கினேன் அவருக்கு முன்னால் சென்று வீடியோ எடுத்த போது தான் அவர் உடனடியாக வேகமாக வந்து அனுமதியின்றி படம் எடுப்பது தவறு என்று கூறி என் கையைப் பிடித்தார்.
உடனே நான், அனுமதியின்றி இன்னொருவர் கையை தொடுவதும் தவறு என்று கூறினேன். அதற்கு அவர், நான் தொட்டது 'பிரண்ட்லி டச்' என்று கூறியவர், 'நான் தற்போது பிஸியாக இருக்கிறேன் நண்பா, என்னை தொந்தரவு செய்யாதே.. படம் எடுக்காதே..' என்று கூறிவிட்டுக் கிளம்பினார். அதனால் செல்போனை அவர் பிடுங்கவும் இல்லை.. தட்டிவிடவும் இல்லை.. பின்னர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை அவரே வந்து என்னுடன் செல்பி எடுப்பதற்கு போஸ் கொடுத்து விட்டு சென்றார்” என்று அந்த ரசிகர் விளக்கம் கூறியுள்ளார்.