இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
தமிழில் 'ராஜா ராணி, நையாண்டி' உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றவர் நடிகை நஸ்ரியா. மலையாளத்தில் பிஸியாக நடித்து வந்த சமயத்திலேயே நடிகர் பஹத் பாசிலை கடந்த 10 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலானார். கடந்த சில வருடங்களாக நடிப்பிற்கு மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்த நஸ்ரியா செலெக்ட்டிவ்வான படங்களில் மட்டும் நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த வருடம் வெளியான 'சூட்சும தர்ஷினி' திரைப்படம் நஸ்ரியாவின் கம்பேக் படம் என்று சொல்லும் அளவிற்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.
எப்போதுமே சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நஸ்ரியா, கடந்த நான்கு மாதங்களாகவே சைலன்ட் மோடில் இருந்தார். இந்த நிலையில் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தனக்கு என்ன ஆனது என்பது குறித்து ஒரு தன்னிலை விளக்கம் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்திலேயே வெளியிட்டுள்ளார் நஸ்ரியா.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நான் எப்போதுமே இந்த உலகில் ஆக்டிவாக இருந்து வருபவள்.. ஆனால் சமீபகாலமாக நான் கொஞ்ச நாள் ஆளே காணாமல் போய் விட்டேன் என பலரும் நினைத்திருக்கலாம். அது ஏன் என உங்களுக்கு விளக்கம் சொல்ல வேண்டியது என்னுடைய கடமை. கடந்த சில மாதங்களாகவே நான் என்னுடைய உடல் நலம் மற்றும் மனநலம் குறித்த சவால்களை எதிர்கொண்டு அதற்கான சிகிச்சைகளை எடுத்துக் கொண்டு போராடி வருகிறேன். தற்போது ஓரளவுக்கு அதிலிருந்து மீண்டும் வந்து கொண்டிருக்கிறேன். இன்னும் சில நாட்களில் இதிலிருந்து முழுமையாக குணமடைந்து விடுவேன்.
அதேசமயம் இந்த இடைப்பட்ட காலத்தில் என்னுடைய 30 ஆவது பிறந்தநாள், புது வருட கொண்டாட்டம், என்னுடைய சூட்சும தர்ஷினி படத்தின் வெற்றி விழா என எந்த முக்கிய நிகழ்வுகளிலும் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. அதுமட்டுமல்ல என்னுடைய நண்பர்களுக்கு, எனக்கு என்ன ஆனது என்று விவரித்து சொல்லாததற்கும் அவர்களுடைய தொலைபேசி அழைப்புகளை எடுக்காததற்கும் அவர்களுக்கு மெசேஜ் பண்ணாததற்கும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னால் யாருக்கேனும் அசவுகரியம் ஏற்பட்டிருந்தால் என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அந்த அளவிற்கு நான் முழுமையாக முடங்கி போனேன் என்றுதான் சொல்லவேண்டும்.
என்னை தங்களது படங்களில் நடிக்க வைக்க தொடர்பு கொண்டு முடியாமல் போனவர்களிடமும் என்னுடைய மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன். சமீபத்தில் எனக்கு சூட்சும தர்ஷினி படத்திற்காக சிறந்த நடிகைக்கான கேரள அரசு கிரிட்டிக் விருது கிடைத்துள்ளதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இது ஒரு கடினமான பயணமாக இருந்தாலும் உங்களுடைய அன்பையும் ஆதரவையும் இந்த நேரத்தில் நான் புரிந்து கொண்டு பாராட்டுகிறேன்.. நான் முழுமையாக திரும்பி வர இன்னும் கொஞ்சம் நாட்கள் எடுக்கும்.. ஆனாலும் விரைவில் இதிலிருந்து மீண்டு வருவேன்” என்று கூறியுள்ளார்.