பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'கூலி' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ரிலீஸ் என உறுதியாக அறிவிக்கப்பட்டு விட்டது. 'ஜெயிலர்' படத்தில் எப்படி மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப், சுனில், விநாயகன் என படம் களைகட்டியதோ, அதேபோல கூலி படத்திலும் நாகர்ஜுனா, உபேந்திரா, அமீர்கான் உள்ளிட்ட பிறமொழி பிரபலங்கள் நடித்துள்ளனர், இதில் கன்னட திரை உலகை சேர்ந்த உபேந்திரா கடந்த 17 வருடங்களுக்கு முன்பு விஷால் நடித்த சத்யம் படத்தின் மூலம் தமிழிலும் அடியெடுத்து வைத்தார், அதன் பிறகு இப்போது ரஜினிகாந்த் உடன் கூலி படத்தில் நடிப்பதன் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார்.
அதே சமயம் 'கூலி' திரைப்படம் வெளியாகும் அதே நாளில் கன்னடத்தில் சிவராஜ்குமார் நடித்துள்ள '45' என்ற திரைப்படமும் வெளியாகிறது. இந்த படத்திலும் சிவராஜ்குமார் உடன் இணைந்து உபேந்திரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த வகையில் அவரது இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாக இருக்கின்றன. இந்த இரண்டு படங்கள் மட்டுமல்லாது அதே தேதியில் தான் ஹிருத்திக் ரோஷன் - ஜூனியர் என்டிஆர் இணைந்து நடித்துள்ள 'வார்-2' என்கிற ஹிந்தி படமும் வெளியாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.




