போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் |
ரவி மோகன் நடித்து வெளியான இறைவன், சைரன், பிரதர், காதலிக்க நேரமில்லை போன்ற படங்கள் அடுத்தடுத்து தோல்வியடைந்த நிலையில், தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா இயக்கி வரும் பராசக்தி படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இப்படத்தில் ஸ்ரீ லீலா நாயகியாகவும், அதர்வா முக்கிய வேடத்திலும் நடிக்கிறார்கள். இதுதவிர கராத்தே பாபு என்ற படத்திலும் நடிக்கிறார்.
இந்த நிலையில் சென்னையில் நடந்த அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ரவி, ‛‛இந்த நிகழ்ச்சியில் பல அரசியல்வாதிகள் இருக்கிறீர்கள். அதேபோல் தமிழ் சினிமாவில் இருந்து பல நடிகர் நடிகைகள் அரசியலுக்கு வந்து வெற்றி பெற்றுள்ளார்கள். இன்னும் சிலர் அரசியல்வாதிகளாக செயல்பட்டு வருகிறார்கள். அதைப்பார்த்து நீங்களும் அரசியலுக்கு வரப்போகிறீர்களா என்று இங்கு சிலர் என்னிடத்தில் கேட்டார்கள். என்னை பொறுத்தவரை எந்த காலத்திலும் நான் அரசியலுக்கு வரமாட்டேன். அதற்கெல்லாம் சான்ஸே இல்லை. தொடர்ந்து சினிமாவில் நடிகராக இருக்கவே நான் ஆசைப்படுகிறேன் என்றார்.