என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
தமிழ் சினிமா நடிகர்கள் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் அல்லாது மற்ற மொழி தயாரிப்பாளர்களின் படங்களில் நடிப்பதற்கு முன்னுரிமை தருகிறார்கள். அது இங்குள்ள தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களைக் கோபமடைய வைத்துள்ளது என ஏற்கெனவே சொல்லியிருந்தோம்.
அஜித் நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'குட் பேட் அக்லி' படத்தைத் தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்தது. தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை ஆதிக் ரவிச்சந்திரனுக்கே அஜித் கொடுத்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. அந்தப் படத்தை மைத்ரி நிறுவனமே தயாரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.
இதற்கிடையில் அந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பை தெலுங்கு இயக்குனர் ஒருவருக்குத் தரலாம் என்றும் அந்த நிறுவனம் விரும்புகிறதாம்.
பொதுவாக ஒரு இயக்குனர் அல்லது ஒரு தயாரிப்பு நிறுவனம் தனக்குப் பிடித்துவிட்டால் அவர்களுடன் அடுத்தடுத்து படங்கள் செய்வார் அஜித். இதற்கு முன்பும் அதற்கு உதாரணம் உள்ளது. அஜித் யாரை கை காட்டுகிறாரோ அவர்கள்தான் அடுத்த தயாரிப்பாளர், அடுத்த இயக்குனர். அதுவரையில் பல யூகமான செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கும்.