அடுத்த வாரம் 'கருப்பு' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு? | கதாநாயகியும் பாடலும் இல்லாத படத்தில் ஜெய் | 'ஸ்லம்டாக் மில்லியனர்' மூலம் இப்போதும் ராயல்டி பெறும் அனில் கபூர் | ஐட்டம் டான்ஸ் ஆடி இருப்பது நிகிலா விமல் அல்ல வேதிகா ; உடைத்த சஸ்பென்ஸ் | சிம்பு படத்தில் நெல்சனுக்கு பதிலாக அஸ்வத் மாரிமுத்து | 69 வயதில் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் ஜாக்கி ஷெராப் | 18 ஆண்டுகளுக்குபின் “தாம் தூம்” ஏப்ரல் 10ம் தேதி ரீ-ரிலீஸ் | 'காலா' படத்தில் நடித்ததற்காக ஹிந்தி நடிகரை கடிந்துகொண்ட நானா படேகர் | சினிமா அற்புதமான தொழில்: விஜய்சேதுபதி அனுபவ பேச்சு | ஆஸ்கர் நினைவஞ்சலி ஏற்படுத்திய சர்ச்சை |

விஜயின் ஜனநாயகன் படம் தணிக்கை சான்றிதழ் பிரச்னை தொடர்பாக சென்னை, ஐகோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் வழக்கும் தொடர்ந்த நிலையில் இன்று அந்த வழக்கை வாபஸ் பெற்றது. இதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கடைசிப்படம் ‛ஜனநாயகன்'. பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் பொங்கலை முன்னிட்டு ஜன., 9ம் தேதியே வெளியாக வேண்டியது. ஆனால் படத்திற்கு தணிக்கை சான்று வழங்குவதில் இழுபறி நீடித்ததால் தயாரிப்பு நிறுவனம் சென்னை, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. அதற்குள் தயாரிப்பு நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டை நாட, நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டை நாட உத்தரவிட்டது.
தொடர்ந்து இந்த வழக்கு மீண்டும் ஐகோர்ட்டில் இரு நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் தனி நீதிபதி பிறபித்த உத்தரவை ரத்து செய்ததோடு மீண்டும் முறையாக விசாரிக்கும்படி உத்தரவிட்டது. இந்த வழக்கு மீண்டும் கோர்ட்டில் பட்டியலிடப்படாமல் இருந்தது.
இதற்கிடையே படத் தயாரிப்பு நிறுவனம் தணிக்கை வாரியத்திடம் மறுதணிக்கைக்கு விண்ணபித்தது. அதோடு வழக்கை வாபஸ் பெற முடிவு செய்து நேற்று மனு தாக்கல் செய்தது. இந்த மனு இன்று ஏற்றக் கொள்ளப்பட்டு வழக்கை வாபஸ் பெற நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனால் தணிக்கை சான்றிதழ் கோரி தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது.
இதன்மூலம் இந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. இனி தணிக்கை வாரியம் சொல்லும் திருத்தங்கள் கட், மியூட் கொடுத்து, சென்சார் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த நடைமுறையால் படம் விரைவில் ரிலீஸ் ஆகலாம்.