'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷின் 51வது படமாக 'குபேரா' உருவாகியுள்ளது. இதில் நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சார்ப், பாக்யராஜ், சுனைனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாந்த் இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே இதன் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பு மட்டும் மீதமிருந்தது. நேற்று இந்த பாடல் காட்சிக்கான படப்பிடிப்பை துவங்கினர். இந்த பாடல் காட்சி படப்பிடிப்பு தளத்தில் இருந்து இணையத்தில் கசிந்தது வைரலாகி வருகிறது. இந்த பாடலை தனுஷ் தெலுங்கு மொழியில் பாடியுள்ளார். முதல் முறையாக தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையில் தனுஷ் பாடியுள்ளார். வருகின்ற மே 1ம் தேதி அன்று முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட உள்ளார்களாம். இவ்வருடம் ஜூன் 20ம் தேதி இப்படம் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.