‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் | மீண்டும் தமிழில் நடிக்கும் அன்னாபென் | அரசன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது |

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் 'ரெட்ரோ'. அவருடன் பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
தற்போது இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படம் மே 1ம் தேதி அன்று திரைக்கு வருகிறது. சமீபத்தில் இந்த படத்திலிருந்து வெளியான மூன்று பாடல்களும் நல்ல வரவேற்பு பெற்றன. குறிப்பாக 'கனிமா' எனும் பாடல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி அன்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இதற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள நடிகர் ரஜினிகாந்தை படக்குழு சந்தித்து பேசியுள்ளனர். கடந்த சில நாட்களாக ‛ஜெயிலர் 2' படப்பிடிப்பில் ரஜினி கோவையில் இணைந்து நடித்து வருகிறார். இதற்கிடையில் எப்படி இசை வெளியீட்டு விழா வருவார் என்பது கேள்விகுறி தான்.