கூலி படத்தை தொடர்ந்து ஜெயிலர் 2விலும் நாகார்ஜூனா? | ''நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்'': எதை சொல்கிறார் மணிரத்னம்? | இட்லி கடை ரிலீஸ் தேதியில் சூர்யா 45 | தியேட்டரில் வெளியாகும் 'பறந்து போ' | என்னை பற்றிய பதிவுகளை நீக்க வேண்டும்: ஆர்த்திக்கு, ரவி மோகன் நோட்டீஸ் | மீண்டும் இணையும் வடிவேலு - பார்த்திபன் | பிளாஷ்பேக்: பூமியில் வாழ்ந்த கடவுள் 'என்.டி.ஆர்' | பிளாஷ்பேக்: தமிழில் 2 படங்கள் மட்டுமே இயக்கிய விட்டலாச்சார்யா | சிறிய படங்களுடனே முடிவுக்கு வரும் கோடை விடுமுறை | பிளாஷ்பேக்: ஜெயலலிதாவின் ஆசையை பூர்த்தி செய்த “தர்மம் எங்கே?” |
'மூக்குத்தி அம்மன்- 2' படத்தின் பூஜையின் போது, லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் தனக்கு வேண்டாம் என்று அறிவித்தார் நயன்தாரா. என்றாலும் அந்த பட்டத்தை வைத்து சோசியல் மீடியாவில் ரசிகர்கள் மோதலில் ஈடுபடுவது தொடர்ந்து வருகிறது. அதாவது, நேற்று அஜித்துடன் திரிஷா இணைந்து நடித்துள்ள 'குட் பேட் அக்லி' படம் திரைக்கு வந்துள்ள நிலையில், திரிஷாவின் ரசிகர்கள், ஒரே ஒரு லேடி சூப்பர் ஸ்டார்தான். அது எங்கள் திரிஷாதான் என்று சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்கள். ஆனால் இதற்கு நயன்தாராவின் ரசிகர்கள், குட் பேட் அக்லியில் திரிஷா மிகவும் மோசமாக நடித்திருக்கிறார். 20 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வரும் அவரால் இப்போது வரை சொந்த குரலில் பேச முடியவில்லை. நடிப்பே வரவில்லை என்று விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் இணையப் பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருக்கிறார் திரிஷா. அந்த பதிவில், 'ஷப்பா, டாக்ஸிக் மக்களே, உங்களுக்கெல்லாம் எப்படி தான் தூக்கம் வருகிறதோ. சோசியல் மீடியாவில் அறிவுகெட்டதனமாக மற்றவர்கள் பற்றி பதிவு போடுவதுதான் உங்களுக்கு வேலையா. உங்களுக்காக மிகவும் வருத்தப்படுகிறேன். இது ஒரு கோழைத்தனம். காட் பிளஸ் யூ' என்று ஒரு பதிலடி கொடுத்திருக்கிறார் திரிஷா.