ஆலயமணி, சிவாஜி, பொன்னியின் செல்வன் 1 : ஞாயிறு திரைப்படங்கள் | ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் |
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' என்ற படம் வருகிற 10ம் தேதி திரைக்கு வருகிறது. கேங்ஸ்டர் கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் அஜித் குமார் மாறுபட்ட இளமையான கெட்டப்பில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் டிக்கெட் முன்பதிவு கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் நிலையில், இதுவரை ஒரு லட்சத்து 83 ஆயிரம் டிக்கெட் மட்டுமே விற்பனையாகி இருக்கிறது.
ஆனால் அஜித்தின் 'விடாமுயற்சி' படம் ரிலீசுக்கு முன்பு 6 லட்சத்து 89 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனையாகி இருந்தது. இதைவைத்து பார்க்கும் போது, விடாமுயற்சியைவிட குட் பேட் அக்லி படத்தின் டிக்கெட் முன்பதிவு மிக குறைவாகவே உள்ளது. அந்த வகையில் இப்படம் இதுவரை 18 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது.
மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான விடாமுயற்சி படம் ரசிகர்களை ஏமாற்றி விட்டதால் இந்த படத்தை பார்ப்பதில் ரசிகர்களுக்கு பெரிதாக ஆர்வமில்லை என்பதையே இது வெளிப்படுத்தி உள்ளது. என்றாலும் படம் திரைக்கு வந்து பாசிட்டிவான விமர்சனங்களால் இப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று படக்குழு எதிர்பார்க்கிறது.