'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் 'ரெட்ரோ' படம் மே ஒன்றாம் தேதி திரைக்கு வருகிறது. காதல் கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தை அடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் தனது 45வது படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்த படத்தில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சூர்யா 45வது படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறார்கள். ஆனால் இதே தீபாவளி தினத்தன்று பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் சர்தார்-2 படமும் வெளியாக இருப்பதாக ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. ஒருவேளை சூர்யா 45வது படம் வெளியாகும் தீபாவளி தினத்தில் கார்த்தி படமும் வெளியாகும்பட்சத்தில் அவர்கள் இருவருக்குமிடையே நடக்கும் நேரடி மோதலாக இருக்கும். என்றாலும் சம்பந்தப்பட்ட படக்குழு இன்னும் இந்த தகவலை உறுதிப்படுத்தவில்லை.