'ரெட்ரோ' : ரெமான்ஸ் படமாம், ஆக்ஷன் படம் இல்லையாம்… | ககொ ககொ - கா கா, விரைவில் ரீ ரிலீஸ் | 'தொடரும்' வரவேற்பு : மோகன்லால் அன்புப் பதிவு | நானிக்காக அனிருத் பாடிய தானு பாடல் வெளியீடு | பீனிக்ஸ் வீழான் ஜூலை நான்காம் தேதி ரிலீஸ் | கேங்கர்ஸ் படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | விஜய் சேதுபதியுடன் மோதும் பஹத் பாசில் | சூர்யா 46வது படத்தின் படப்பிடிப்பு எப்போது | இட்லி கடை படத்தின் அப்டேட் தந்த அருண் விஜய் | மதகஜராஜா ; சுந்தர் சி சொன்ன வார்த்தை பலித்துவிட்டது : சந்தானம் |
சென்னை : இயக்குனர் பாரதிராஜா மகனும், நடிகருமான மனோஜ் பாரதி, 48 மாரடைப்பால் சென்னையில் காலமானார்.
தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் என பெயர் எடுத்தவர் பாரதிராஜா. தற்போது படங்களிலும் நடித்து வருகிறார். இவரது மகன் மனோஜ். உதவி இயக்குனராக மணிரத்னத்திடம் வேலை பார்த்துள்ளார். இயக்குனராக வேண்டும் என சினிமாவிற்கு வந்தவர் நடிகர் ஆனார்.
அப்பா பாரதிராஜா இயக்கிய தாஜ்மஹால் படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கினார். தொடர்ந்து அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், கடல் பூக்கள் போன்ற படங்களில் நாயகனாக நடித்தார். அதன்பின் குணச்சித்ர நடிகராக மாறிய அவர் சமுத்திரம், அன்னக்கொடி, மாநாடு, விருமன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். மார்கழி திங்கள் என்ற படத்தையும் இயக்கினார். இடையில் தனது அப்பாவின் கிளாசிக் படமான சிவப்பு ரோஜாக்கள் படத்தினை இந்தகாலத்திற்கு ஏற்றபடி ரீ-மேக் செய்ய போவதாக அறிவித்தார். அதுதொடர்பான பணிகளிலும் ஈடுபட்டு இருந்தார்.
சமீபகாலமாக உடலில் அவருக்கு சில பிரச்னைகள் ஏற்பட்டது. குறிப்பாக ஓரிரு வாரத்திற்கு முன்னர் இதயத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்துள்ளார். அதன்பின் உடல்நலம் தேறி வந்தவர் சென்னை, சேத்துபட்டில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில் திடீரென இன்று(மார்ச் 25) மாலை 6 மணிக்கு மனோஜிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவர்களை அழைத்து பார்த்துள்ளனர். ஆனால் அவர் உயிர் பிரிந்துவிட்டது.
மலையாள நடிகையான அஸ்வதி என்ற நந்தனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் மனோஜ். இவர்களுக்கு அர்ஷிதா, மதிவதனி என்ற இரு மகள்களும் உள்ளனர்.
இன்று தான் கராத்தே மாஸ்டரும், நடிகருமான ஹூசைனி இரத்த புற்றுநோயால் மறைந்தார். அந்த செய்தியே ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது. அதற்குள் மனோஜின் திடீர் மறைவு திரை உலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தொடர்ந்து பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மனோஜின் உடல் சேத்துபட்டில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரது மறைவு செய்தி அறிந்து நடிகர்கள் கார்த்தி, இளவரசு, உதயா, இயக்குனர்கள் ராஜ் கபூர், ஆர்கே செல்வமணி, ராம், மாரி செல்வராஜ், தயாரிப்பாளர்கள் ஜே.சதீஷ் குமார், டி.சிவா, சுரேஷ் காமாட்சி, உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் நேரில் சென்று பாரதிராஜாவிற்கு ஆறுதல் கூறியும், மனோஜிற்கு அஞ்சலியும் செலுத்தினர். இறுதிச்சடங்கு சென்னையிலா அல்லது பாரதிராஜாவின் சொந்த ஊரான தேனியிலா என்பது நாளை காலையே தெரியவரும்.
முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
நடிகரும் இயக்குநர் பாரதிராஜாவின் மகனுமான மனோஜ் பாரதி மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். இளம் வயதில் அவர் எதிர்பாராதவிதமாக மறைந்துவிட்டது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அன்பு மகனை இழந்து வாடும் பாரதிராஜாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.