'ஆபரேஷன் சிந்தூர்' : டிரேட் மார்க் பதிவுக்கான விண்ணப்ப சர்ச்சை | 'ரெட்ரோ' ருக்கு - வாழ்த்தியவர்களுக்கு பூஜா ஹெக்டே நன்றி | லாரன்ஸ் உடன் இணையும் மாதவன், நிவின் பாலி | பிறந்தநாளில் சூர்யா 45 பட அப்டேட் | மோகன்லாலின் மலையாள படப்பிடிப்புக்கு விசிட் அடித்த நெல்சன் : ஜெயிலர் 2விலும் நடிப்பது உறுதி | காந்தாரா படப்பிடிப்பில் ஆற்றில் மூழ்கி துணை நடிகர் உயிரிழப்பு | எளிமையாக நடைபெற்ற ரெமோ வில்லனின் திருமணம் | ரெட்ரோ படப்பிடிப்பில் காயம் அடைந்த சிறுமிக்கு உதவிக்கரம் நீட்டிய மம்முட்டி | கலைஞர்களுக்காகவே உருவாக்கப்பட்ட 'குங்குனாலோ' செயலி | அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நடிக்கிறாரா சமந்தா? அவரே வெளியிட்ட தகவல் |
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சல்மான்கான் நடிப்பில் உருவாகியுள்ள ‛சிக்கந்தர்' படம் வரும் 30ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படம் தொடர்பாக ஏ.ஆர்.முருகதாஸ் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், ''மும்பையில் ஒரு படத்தின் படப்பிடிப்பின் போது அதில் சல்மான்கான் கலந்து கொண்டிருந்தார். நான் அங்கு சென்று முதன் முதலில் அவரை சந்தித்து பேசினேன். அச்சந்திப்பின் போது உங்களுடன் இணைந்து ஒரு படம் பண்ண விரும்புவதாக குறிப்பிட்டேன். உடனே அவரும், நானும் உங்களுடன் இணைந்து ஒரு படம் பண்ண விரும்புவதாக குறிப்பிட்டார்.
அதன் பிறகு சில ஆண்டுகள் சென்ற நிலையில் திடீரென ஒரு முறை என்னை அழைத்து கொரிய படம் ஒன்றை ரீமேக் செய்யும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் நான் படம் பண்ணுவதாக இருந்தால் அது எனது சொந்த கதையாக இருக்கவேண்டும் என்று கூறி மறுத்துவிட்டேன். அதன் பின்னர் கொரோனா காலத்தில் தயாரிப்பாளர் சாஜித் நாடியாவாலா நல்ல கதைக்காக என்னை சந்தித்தார். இருவரும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகு மும்பையில் உள்ள சல்மான்கான் வீட்டில் சென்று அவரை சந்தித்து பேசினோம். கதையை சல்மான்கான் அரை மணி நேரம் கேட்டார்.
பிறகு சிகரெட்டை புகைத்துக்கொண்டே எழுந்து சென்றுவிட்டார். அதையடுத்து என்னிடம் 'நான் எப்படி வேலை செய்வேன் என்று தெரியுமா?' என்று கேட்டார். நான் தெரியாது என்று தெரிவித்தேன். உடனே நான் பிற்பகல் 12 மணிக்கு தொடங்கி அதிகாலை 2 மணி வரை வேலை செய்வேன். உங்களுக்கு அது ஓகேவா என்று கேட்டார். இதன் மூலம் எனது கதை அவருக்கு பிடித்து விட்டதாக நினைத்தேன். ஒரு காட்சி எப்படி அமைய வேண்டும் என்பதற்கு எங்களுக்குள் பலவிதமான கருத்துக்கள் இருக்கும். எங்களால் ஒரு முடிவுக்கு வர முடியாதபோது, நாங்கள் இரண்டு வழிகளிலும் படப்பிடிப்பு நடத்திவிட்டு எடிட்டிங்கின் போது இறுதி முடிவு எடுத்துகொள்வோம்.
ஒரு சூப்பர் ஸ்டாரை வைத்து வழக்கமான படம் எடுப்பது என்பது சாத்தியமில்லை, ஏனெனில் அந்த படத்தில் ரசிகர்களை கவரும் அனைத்து அம்சங்களும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சூப்பர் ஸ்டார்களுடன் பணிபுரியும் போது, ஒரிஜினல் திரைக்கதைக்கு 100 சதவீதம் உண்மையாக இருக்க முடியாது. பார்வையாளர்களுக்காக, ரசிகர்களுக்காக, ஓபனிங்கிற்காக நாம் சமரசம் செய்ய வேண்டும். ரசிகர்களை திருப்திப்படுத்த அவர்களைப் பற்றி சிந்திக்க வேண்டும். ரசிகர்களுக்காக சூப்பர் ஸ்டார்கள் மெனக்கெடுவதை பார்த்து நாம் காற்றுகொள்ளலாம்." என்று அவர் தெரிவித்தார்.