சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ரெட்ரோ. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படம் மே ஒன்றாம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் இன்று இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் 42வது பிறந்த நாளை ஒட்டி ரெட்ரோ படத்தை தயாரித்திருக்கும் 2டி நிறுவனம் 55 வினாடிகள் கொண்ட ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், ரெட்ரோ படத்தின் முக்கிய காட்சிகள் மற்றும் சில காட்சிகளை சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் படமாக்கும் மேக்கிங் வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவின் இறுதியில் படக்குழு கார்த்திக் சுப்புராஜ்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.