மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் |

தெலுங்கு சின்னத்திரையை சேர்ந்த மான்யா ஆனந்த் தமிழில் வானத்தைப் போல தொடரில் நாயகியாக நடித்திருந்தார். இந்த தொடரில் ஏற்கனவே நடித்து வந்த ஸ்வேதா விலகியவுடன் அவருக்கு பதிலாக என்ட்ரி கொடுத்த மான்யாவிற்கு ஆரம்பத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால், போக போக ஸ்வேதாவை விட மான்யா தான் துளசி என்ற கதாபாத்திரத்திற்கு கட்சிதமாக பொருந்தும் வகையில் நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார்.
அந்த தொடர் முடிவுக்கு வந்தவுடன் தமிழில் வேறு எந்த சீரியலிலும் அவர் நடிக்கவில்லை. இதனால், ரசிகர்கள் மீண்டும் அவரது என்ட்ரியை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பின் படியே மான்யா ஆனந்த், ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரில் என்ட்ரி கொடுத்துள்ளார். யாரடி நீ மோகினி, சூர்யவம்சம் ஆகிய தொடர்களை தயாரித்திருந்த மங் ஸ்டூடியோ நிறுவனம் தான் இந்த புதிய தொடரை தயாரிக்க உள்ளது. மிக விரைவில் இந்த தொடர் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவுள்ளது.