உண்மை கதையில் யோகி பாபு | வெற்றி ஜோடியாக தமிழில் அறிமுகமாகும் தெலுங்கு நடிகை | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக திரும்பும் ஷ்ரத்தா | 'மாமன்' சூரியின் கதை: இயக்குனர் தகவல் | பிளாஷ்பேக்: பல தலைமுறைகளை வாழ வைத்த 'மைடியர் குட்டிச்சாத்தான்' | பிளாஷ்பேக்: காதல் சின்னத்தை மீட்டெடுக்க விரும்பிய வி.என்.ஜானகி | மே 1 : சினிமா ரசிகர்களுக்காக பல வெளியீடுகள் | கவினின் 'டாடா' படம் ஓடிடி.,யில் எங்கே போனது? | ஓடிடி.,யில் விலை போகாத 'கேங்கர்ஸ்' | வேலை நாட்களில் எடுபடாத விஜய்யின் சச்சின் |
மலையாள திரையுலகில் நட்சத்திர சகோதரர்களாக வலம் வருபவர்கள் வினித் சீனிவாசன் மற்றும் அவரது சகோதரர் தியான் சீனிவாசன். பிரபல குணச்சித்திர நடிகரான சீனிவாசனின் மகன்களான இவர்கள் இருவரில் வினித் சீனிவாசன், ஆரம்பத்திலிருந்து இயக்குனராக, பின்னர் நடிகராக என வெற்றிகரமாக இரட்டை குதிரை சவாரி செய்து வந்தார். தியான் சீனிவாசனும் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு நிவின்பாலி, நயன்தாரா நடித்த லவ் ஆக்சன் ட்ராமா படத்தின் மூலமாக இயக்குனராக மாறினார்.
தற்போது ஐந்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் டைரக்ஷனை கையில் எடுக்கப் போகிறார் தியான் சீனிவாசன். கடந்த 2013ல் வினித் சீனிவாசன் இயக்கத்தில் ஷோபனா, தியான் சீனிவாசன் இருவரும் இணைந்து நடித்து வெளியான படம் 'திர'. (இந்தபடத்துக்காகத்தான் ஷோபனா த்ரிஷ்யம் பட வாய்ப்பை நழுவவிட்டார்). அப்போது இந்த படம் தோல்வி படம் தான்.. இருந்தாலும் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்கு ஸ்கிரிப்ட் தயார் செய்து வருகிறாராம் தியான் சீனிவாசன். இந்தப்படத்தில் அவர் நடிகராகவும் அறிமுகமானார். முதல் பாகத்தை போலவே இந்த பாகத்திலும் அவரே கதாநாயகனாக நடிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.