பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படத்தின் அப்டேட் ஒன்று இன்று வெளியானது. படத்திற்கான பாடல் பதிவுகளை ஆரம்பித்துவிட்டதாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் இன்று பதிவிட்டிருந்தார்.
சூர்யா தற்போது ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45வது படத்தில் நடித்து வருகிறார். இன்னும் சில வாரங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைய உள்ளது என்கிறார்கள். அப்படத்தை முடித்த பின்பு அவர் 'வாடிவாசல்' படப்பிடிப்புக்கு வராமல் அவரது 46வது படத்தில் நடிக்கப் போவார் என்று சொல்கிறார்கள்.
'லக்கி பாஸ்கர்' படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்க, தெலுங்கின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் இப்படத்தைத் தயாரிக்க உள்ளதாம். இப்படத்திற்காக சூர்யாவுக்கு பெரும் தொகை சம்பளமாகத் தரப்பட்டுள்ளது என்கிறார்கள். அப்படத்தின் படப்பிடிப்பு முடித்த பிறகுதான் 'வாடிவாசல்' படப்பிடிப்பிற்கு சூர்யா வருவாராம்.
அறிவிக்கப்பட்டதிலிருந்து சூர்யாவின் வருகைக்காக நீண்ட காலமாகக் காத்திருக்கிறது 'வாடிவாசல்'.




