தமிழுக்கு வருகிறார் ஜான்வி கபூர் | புதிய பிராண்ட் கார் வாங்கிய சீரியல் நடிகை வைஷாலி தனிகா! | ரஜினிக்கு எழுதிய கதையை சூர்யாவுக்காக திருத்தம் செய்த கார்த்திக் சுப்பராஜ்! | சிவகார்த்திகேயன் - ஸ்ருதிஹாசனை இயக்கும் லோகேஷ் கனகராஜ்! | வேட்டையனை தொடர்ந்து ஜெயிலர் -2விலும் ரஜினியுடன் இணைந்த பஹத் பாசில்! | காஷ்மீர் தாக்குதல்: உயிர் தப்பிய பாலிவுட் நடிகை | சொட்டைத் தலையர்களின் கதை 'சொட்ட சொட்ட நனையுது' | பெரிய பட்ஜெட்டில் உருவான 'டிடி நெக்ஸ்ட் லெவல்': சந்தானம் தகவல் | நான் சிம்ரனோடு நடிக்க கூடாதா: சசிகுமார் கேள்வி | பிளாஷ்பேக்: அப்போதே அதிர வைத்த திகில் படம் |
கடந்த 2019ல் நடிகர் பிரித்விராஜ் முதல்முறையாக இயக்குனராக மாறி மோகன்லாலை வைத்து 'லூசிபர்' என்கிற படத்தை இயக்கினார். அரசியல் கேங்ஸ்டர் பின்னணியில் உருவான அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு பிறகு அதன் இரண்டாம் பாகமாக 'எம்புரான்' படம் உருவாகியுள்ளது. வரும் மார்ச் 27ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. லூசிபர் முதல் பாகத்தில் நடைபெற்ற கதையின் தொடர்ச்சியாக அதில் இடம்பெற்று இருந்த பல முக்கிய கதாபாத்திரங்களும் இதிலும் தொடரும் விதமாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதனால் லூசிபர் படம் பார்த்த பலரும் அதன் கதை என்னவென்று தற்போது மறந்திருப்பார்களோ என்கிற எண்ணத்தில் எம்புரான் பார்க்க வருவதற்கு வசதியாக அதற்கு முன்பே லூசிபர் படத்தை ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தார் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர். அந்த வகையில் எம்புரான் பட ரிலீஸுக்கு ஒரு வாரம் முன்னதாக அதாவது மார்ச் 20ம் தேதி லூசிபர் படம் ரீ ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது.
எப்படியும் எம்புரான் படத்திற்காக மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் செலவு செய்து படம் பார்க்க வருவார்கள் என்கிற நிலையில் இப்போது லூசிபர் படத்தையும் திரையிட்டால் அதை பார்ப்பதற்கும் ரசிகர்கள் ஒரு முறை கூடுதலாக செலவு செய்ய வேண்டி இருக்கும். இது தேவையில்லாமல் அவர்கள் மீது சுமை ஏற்றுவது போலத்தான் என பல நடுநிலை ரசிகர்கள் மற்றும் திரைப்பட விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.