ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் | ரஜினி, கமல் படத்திலிருந்து விலகிய சுந்தர்.சி : மன்னிப்பு கேட்டு அறிக்கை | கொரில்லா பாணியில் நடந்த யெல்லோ படப்பிடிப்பு | தியாகராஜ பாகவதர் கதைக்கும், காந்தாவுக்கும் தொடர்பா? | ரஜினி, கமல் இணையும் படம் : இசையமைப்பாளர் யார்? | பாட்டியாக நடிக்கிறாரா ரோஜா? | பேய் கதைக்கு ‛ரஜினி கேங்' தலைப்பு ஏன்? | ஜி.வி.பிரகாஷின் 100வது படத்தில் பாடிய யுவன் சங்கர் ராஜா | மகன் விஷயத்தில் விஜய் ஒதுங்கி இருக்க இதுதான் காரணமா ? | 'கும்கி 2' தாமதம் ஏன்?: பிரபு சாலமன் விளக்கம் |

நாளை மார்ச் 7ம் தேதி 9 படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அவற்றில் ஷாம் நடித்துள்ள 'அஸ்திரம்' படம் பின் வாங்கிவிட்டது. போதுமான அளவில் தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்பதால் படத்தைத் தள்ளி வைக்கிறோம் என நேற்றே அறிவித்துவிட்டார்கள். புது வெளியீட்டுத் தேதியை விரைவில் அறிவிக்க உள்ளதாகச் சொல்லி இருக்கிறார்கள்.

அதனால், நாளை 8 படங்கள் வெளியாக உள்ளது. “அம்பி, படவா, ஜென்டில்வுமன், கிங்ஸ்டன், லெக் பீஸ், மர்மர், நிறம் மாறும் உலகில், எமகாதகி'' ஆகிய படங்கள்தான் அவை. 'ஜென்டில்வுமன், மர்மர், நிறம் மாறும் உலகில், எமகாதகி' படங்களின் பத்திரிகையாளர் காட்சிகள் நடந்து முடிந்துள்ளன.
அவற்றில் 'எமகாதகி' படத்தைப் பலரும் பாராட்டியுள்ளார்கள். அறிமுக இயக்குனர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இப்படத்தை இயக்கியுள்ளார். 1997ம் ஆண்டு வெளிவந்த 'கடவுள்' படத்தில் அறிமுகமான வெங்கட ராகுல் இப்படத்தைத் தயாரித்துள்ளார். இறந்த பிறகும் ஒரு பெண் செய்யும் போராட்டம்தான் இப்படத்தின் கதை. பத்திரிகையாளர்கள் பாராட்டியதை படக்குழு சரியாகக் கொண்டு போய் மக்களிடம் சேர்த்தால் இப்படம் வரவேற்பைப் பெற வாய்ப்புள்ளது.