என் பணியை சிறப்பாக செய்ய முயற்சிக்கிறேன் - கஜராஜ் ராவ் | விஷ்ணு விஷாலுக்கு வில்லன் ஆன செல்வராகவன்! | அடுத்த மாதம் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு துவங்குகிறது | ராம்சரண் படத்திற்கு தயாரான சிவராஜ் குமார்! | நாகார்ஜூனா உடன் நடனமாடும் பூஜா ஹெக்டே! | பிளாஷ்பேக் : மோகன் கையில் மைக்கை கொடுத்த இயக்குனர் | பிளாஷ்பேக் : மறக்கடிக்கப்பட்ட மகா கலைஞன் கொத்தமங்கலம் சீனு | கோவில்களில் சினிமா பாட்டு பாட நீதிமன்றம் தடை | சிங்கமுத்து மீதான வழக்கு : வடிவேலு நீதிமன்றத்தில் ஆஜர் | பிளாஷ்பேக்: “இதயக்கனி” திரைப்படத்தின் இறுதிக்கட்ட சண்டைக் காட்சியின் பின்னணி |
'ஆர்ஆர்ஆர்' படத்திற்குப் பிறகு ராஜமவுலி, மகேஷ்பாபு நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் பிரியங்கா சோப்ராக கதாநாயகியாக நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் ஆரம்பமாகி ஐதராபாத்தில் நடந்து வருகிறது.
இப்படத்திற்காக காசி நகரை செட் மூலம் ஐதராபாத்தில் உருவாக்கியுள்ளதாகத் தகவல் வெளியானது. ஐதராபாத்தில் படப்பிடிப்பு ஆரம்பமாகி ஒடிசா மாநிலத்தில் நடந்து வருகிறது. அதற்கடுத்து காசி செட்டில் படப்பிடிப்பு நடக்க உள்ளது.
இந்நிலையில் அந்த செட்டின் புகைப்படத்தை யாரோ பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது. அனுமதி இல்லாமல் இம்மாதிரி புகைப்படங்களை வெளியிடுவதில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் படக்குழுவினர் ஏற்கெனவே தெரிவித்திருந்தனர். அதையும் மீறி புகைப்படம் வெளியாகி உள்ளது.