ராஜமவுலி-மகேஷ்பாபு படம் ; தன்னையறியாமல் உறுதிப்படுத்திய பிரித்விராஜின் அம்மா | ஏப்ரல் 4ல் ஓடிடியில் வெளியாகும் 'டெஸ்ட்' | அஷ்வத் மாரிமுத்துவை 'அட்வான்ஸ்' ஆக நம்பிய சிம்பு | மூக்குத்தி அம்மன் 2 துவக்க விழா : மத்திய அமைச்சர் உள்ளிட்ட விருந்தினர்களை காக்க வைத்த நயன்தாரா | டிவியை தொடர்ந்து ஓடிடியிலும் 'மார்கோ' ஒளிபரப்ப தடை? | மலையாள தயாரிப்பாளர் சங்கம் ஸ்டிரைக் தற்காலிக தள்ளிவைப்பு | கடைசிவரை முரட்டு சிங்கிள் தான் - எதிர்நீச்சல் பார்வதி | 'லூசிபர்' ரீ ரிலீஸ்; ரசிகர்கள் மீது இரட்டிப்பு சுமை ஏற்றும் 'எம்புரான்' | பின் வாங்கியது 'அஸ்திரம்' : நாளை 8 படங்கள் ரிலீஸ் | சஞ்சீவ் விஷயத்தில் நான் அப்படி செய்திருக்க கூடாது - ஸ்ரீ வருத்தம் |
தமிழ் சினிமாவில் மலையாள தேசத்து நடிகைகள் ஆதிக்கம் செலுத்தி வருவதை போன்று மலையாள தேசத்து பாடகிகளும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். சின்னகுயில் சித்ரா, ஜென்ஸி போன்ற பல பாடகிகள் மலையாளத்தை விட தமிழிலேயே அதிகம் பாடி இருக்கிறார்கள். இந்த ஆதிக்கம் இப்போதல்ல 1940ளிலிருந்தே தொடங்குகிறது. இந்த காலத்தில் வைக்கம் விஜயலட்சுமி தமிழில் பாடி வருவதை போன்று அந்தக் காலத்தில் பாடியவர் வைக்கம் சரஸ்வதி.
கேரளாவில் மேடையில் கர்நாடக இசை பாடி வந்தவர் சரஸ்வதி. ஆல் இண்டியா ரேடியோவின் ஆஸ்தான பாடகியாகவும் இருந்தார். இவரது பாடல்கள் இசைத்தட்டுகளாகவும் வெளிவந்தது. 1938ம் ஆண்டு வெளிவந்த 'நந்தகுமார் ' படத்தின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார். அதன் பிறகு 'ஸ்ரீவள்ளி' படத்தில் பாடினார். 'தன அமராவதி' உள்ளிட்ட பல படங்களில் பாடினார்.
இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் ஹிட்டானாலும் ஏனோ தமிழில் தொடர்ந்து பாடவில்லை. மலையாள பாடல்களிலும், கர்நாடக இசை கச்சேரிகளிலுமே அதிக ஆர்வம் செலுத்தினார். இவரது சகோதரர்தான் மலையாள சினிமாவின் முன்னணி பாடகரான ராஜன்.