'மாமன்' சூரியின் கதை: இயக்குனர் தகவல் | பிளாஷ்பேக்: பல தலைமுறைகளை வாழ வைத்த 'மைடியர் குட்டிச்சாத்தான்' | பிளாஷ்பேக்: காதல் சின்னத்தை மீட்டெடுக்க விரும்பிய வி.என்.ஜானகி | மே 1 : சினிமா ரசிகர்களுக்காக பல வெளியீடுகள் | கவினின் 'டாடா' படம் ஓடிடி.,யில் எங்கே போனது? | ஓடிடி.,யில் விலை போகாத 'கேங்கர்ஸ்' | வேலை நாட்களில் எடுபடாத விஜய்யின் சச்சின் | கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் |
பொதுவாக பக்கா கமர்ஷியலாக உருவாகும் படங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஹீரோயின்கள் நடிப்பார்கள். ஆனால் ஒரு வலுவான கதையில் 5 ஹீரோயின்கள் நடிப்பது அபூர்வம். அப்படியான ஒரு படம் சிவாஜி நடித்த 'நீதிபதி'. இந்த படத்தில் சிவாஜியுடன் பிரபுவும் நடித்திருந்தார். ஆர்.கிருஷ்ணமூர்த்தி இயக்க கே.பாலாஜி தயாரித்திருந்தார். 'ஜஸ்டிஸ் சவுத்ரி' என்ற தெலுங்கு படத்தின் ரீமேக்தான் இந்தப் படம்.
சிவாஜி ஒரு நேர்மையான நீதிபதி அவர் ஒரு கடத்தல்காரனுக்கு சிறை தண்டனை அளித்து விடுவார். இதனால் நீதிபதியை பழிவாங்க நினைக்கும் வில்லன் அவர் மகளையே ஒரு குற்றவாளியாக்கி அவர் முன்னால் நிறுத்தி அவர் வாயாலேயே அவளுக்கும் தண்டனை வாங்கி தருவதும், பின்னர் அது தொடர்பான பிரச்னைகள் தீர்வதும்தான் இந்த படத்தின் கதை.
இந்த படத்தில் சிவாஜியின் ஆஸ்தான நாயகிகளான கே.ஆர்.விஜயா, சுஜாதா ஆகியோர் நடித்தனர். அவர்களோடு அன்று இளம் நடிகைகளாக இருந்த ராதிகா, மேனகா, சத்ய கலா ஆகியோரும் நடித்தனர். இவர்களோடு சில்க் ஸ்மிதாவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்தார். படத்திற்கு கங்கை அமரன் இசை அமைத்திருந்தார்.