'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' | முதல்வராக பதவியேற்ற முதல்நாளே கோரிக்கை வைத்த திருப்பூர் சுப்ரமணியன் | விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் வெளியான 'ரவுடி ஜனார்த்தனா' போஸ்டர்! | 'திரிஷ்யம்-3' வெற்றி பெற்றால் 4, 5ம் பாகமும் உருவாகும்!- மோகன்லால் வெளியிட்ட தகவல் | 'கடார் 3' உறுதி ; அமிஷா பட்டேல் வெளியிட்ட தகவல் | ரஜினி, கமல் படத்தில் திரிஷா? | ஒரு முறை இல்லை, பலமுறை வருவது தான் காதல்! - நடிகை தமன்னா | 'ஜெயிலர் 2' படத்தின் முதல் பாடல் எப்போது? | மீண்டும் இணையும் 'ரௌத்திரம்' பட கூட்டணி! | அபிஷன் ஜீவின்த் படத்தில் இரண்டு நாயகிகள்! |

மேயாத மான், ஆடை ஆகிய படங்களை இயக்கியவர் ரத்னகுமார். மாஸ்டர், லியோ, விக்ரம் உள்ளிட்ட படங்களுக்கு கூடுதல் திரைக்கதை எழுதியவர் தற்போது சர்தார் 2, கராத்தே பாபு ஆகிய படங்களுக்கு கூடுதல் திரைக்கதை எழுதியுள்ளார். கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் மற்றும் லோகேஷ் கனகராஜின் ஜீ ஸ்குவாட் ஆகிய இரு நிறுவனங்களின் தயாரிப்பில் '29' என்கிற புதிய படத்தை இயக்கி வருகிறார் ரத்னகுமார்.
இதில் நாயகனாக ரெட்ரோ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த விது நடிக்க, கதாநாயகியாக பிரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ், பிரேம் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க 2000ம் காலகட்ட காதலை மையப்படுத்தி உருவாக்கியுள்ளனர். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றுள்ளது என அறிவித்துள்ளனர். ஓரிரு மாதத்தில் படம் திரைக்கு வர உள்ளது.