காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
பாலிவுட், ஹாலிவுட் என புகழில் இருக்கும் பிரியங்கா சோப்ரா முதன் முதலில் விஜய் நடித்து வெளிவந்த 'தமிழன்' படத்தில்தான் நடிகையாக அறிமுகமானார். 2000ம் ஆண்டில் மிஸ் வேர்ல்டு பட்டம் வென்ற பின் அவரை சினிமா நடிகையாக அறிமுகப்படுத்தியது தமிழ் சினிமா உலகம் தான்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரியங்கா சோப்ராவின் அம்மாவான மது சோப்ரா பிரியங்காவின் முதல் படமான 'தமிழன்' படம் பற்றி பேசியுள்ளார். மஜித் இயக்கத்தில் இமான் இசையில் விஜய் நடித்த அந்தப் படம் மூலம்தான் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார் பிரியங்கா.
மது சோப்ரா கூறுகையில், “மிஸ் வேர்ல்டு' பட்டம் வென்ற பின், ஆரம்பத்தில் சினிமாவில் நடிப்பதற்கு பிரியங்காவுக்கு விருப்பமில்லை. 'தமிழன்' பட வாய்ப்பையும் கூட அவர் மறுத்தார். அதன்பின் பிரியங்காவின் அப்பாவைத் தொடர்பு கொண்டு அவர்கள் பேசினார்கள். அப்பாதான் பிரியங்காவை நடிக்கச் சொல்லி வற்புறுத்தினார். கோடை விடுமுறையில் படப்பிடிப்பை வைத்துக் கொள்வோம் என்றும் சொன்னார்கள். அவரது அப்பா சொன்ன வார்த்தைக்காக பிரியங்கா நடிக்க சம்மதித்தார்.
விஜய் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பவர் பிரியங்கா. ராஜு சுந்தரம் மாஸ்டர் அமைத்த நடனங்கள் சிரமமாக இருந்தது. அப்போது பிரியங்கா நடனத்தைக் கற்றுக் கொள்ளும் வரை விஜய் மிகவும் பொறுமையாக இருந்தார். பிரியங்கா புதிய மொழி ஒன்றை கற்றுக் கொண்டு, வசனங்களைப் பேசினார், நடனமாடினார். படப்பிடிப்பு முடிவதற்குள் விஜய்யும், பிரியங்காவும் நல்ல நண்பர்கள் ஆனார்கள்.
பிரியங்கா கேமரா முன்னால் சிறப்பாக நடிக்க மாலை வேளைகளில் ரூமில் வசனம் பேசி பயிற்சி எடுத்தார். படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது நடிப்பின் மீது அதிக ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார் பிரியங்கா,” என 'தமிழன்' அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
தமிழில் அறிமுகமாகி ஹிந்திக்குச் சென்று அங்கும் முன்னணி நடிகையாக உயர்ந்து ஹாலிவுட் படங்களில் நடிக்கும் அளவிற்குச் சென்றுவிட்டார் பிரியங்கா.