பிரச்னைகளால் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்: சமந்தா | குட் பேட் அக்லி : நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன் | விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா | பறவையை பச்சை குத்திய பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் | கழுத்துல கருங்காலி மாலை ஏன் : தனுஷ் சொன்ன கலகல தாத்தா கதை | 250 கோடி வசூலைக் கடந்த 'லோகா' | 3 நாளில் 80 கோடி கடந்த 'மிராய்' | 'இட்லி கடை' கதை இதுதான் என சுற்றும் ஒரு கதை | 'இளையராஜா' பயோபிக் : திரைக்கதை எழுத ரஜினிகாந்த் ஆர்வம் |
இயக்குனர் ஷங்கரின் முன்னாள் உதவியாளரான அறிவழகன் இயக்கி கடந்த வாரம் வெளிவந்த படம் 'சப்தம்'. இப்படத்தின் ஒலி அமைப்பும், பின்னணி இசையும் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவில் இதுவரை வந்த படங்களில் இந்தப் படத்தில் அவை 'டாப் குவாலிட்டி' ஆக உள்ளதாக பலரும் பாராட்டி வருகிறார்கள்.
படத்தைப் பார்த்த இயக்குனர் ஷங்கர், “ஒரு ஹாரர் திரைப்படத்தில் சப்தத்தை புது விதத்தில் அணுகியது மகிழ்ச்சி. இயக்குனர் அறிவழகனின் டெக்னிக்கல் பலமும், தொய்வில்லாத கதை சொல்லலும் குறிப்பிட வேண்டியவை. இன்டர்வெல்லுக்கு முந்தைய காட்சி எதிர்பாராத ஒலியில் அமைந்துள்ளது. உதயகுமார் மிக்சிங், ஆதியின் நடிப்பு, தமனின் பின்னணி இசை தாக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது” எனப் பாராட்டியுள்ளார்.
அவரது பாராட்டிற்கு படக்குழுவினர் நன்றி தெரிவித்து, அதை சமூக வலைத்தளங்களில் மீண்டும் பதிவு செய்துள்ளனர்.