மருமகனுக்காக படம் தயாரிக்கும் விஜய் ஆண்டனி | ரஜினியே ரத்தத்தை நம்பி தான் படம் எடுக்கிறார் : ராதாரவி பேச்சு | இந்து தர்மத்தை சினிமாவில் சொல்வதை நினைத்து பெருமைப்படுகிறேன் : ‛ஹனுமன்' ஹீரோ | பார்வையாளர்களின் பதிலை மட்டுமே மதிக்கிறேன் : பல்லவி ஜோஷி | 100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? |
இயக்குனரான செல்வராகன் தற்போது பல படங்களில் நடிகராகவும் நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பின் ‛7ஜி ரெயின்போ காலனி' படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். இதில் ரவி கிருஷ்ணா மற்றும் அனஸ்வரா ராஜன் ஆகியோர் நடிக்கின்றனர்.
செல்வராகவன் அவ்வப்போது தத்துவார்த்தமாக பேசி டுவீட் போடுவார். சில சமயங்களில் வீடியோவும் வெளியிடுவார். இப்போது இவர் வெளியிட்ட வீடியோவில், ‛‛நீங்கள் உங்கள் லட்சியத்தை அடைய நினைப்பது நல்லது. அதை ஏன் ஊர் முழுக்க தம்பட்டம் அடிக்க வேண்டும். என்ன செய்ய போறீங்கனு யாரிடமும் சொல்லாதீங்க. அந்த காரியம் நிறைவேறாது. நீங்கள் பிறரிடமும் சொல்லும்போது அவர்கள் மகிழ்ச்சி அடைய மாட்டார்கள். மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருக்கணும் என யாரும் நினைப்பதில்லை. யாரிடமும் உதவி கேட்காதீங்க. ஒன்றரை அணாவிற்கு உதவி செய்துவிட்டு ஆயிரம் கோடிக்கு பேசுவாங்க. அதை அவர்கள் வாழ்நாள் முழுக்க சொல்லி காட்டுவார்கள்'' என்கிறார்.