டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் | தமிழ் படத்தில் மாலத் தீவு நடிகை | பிளாஷ்பேக்: பக்தி படத்தில் விஜயகாந்த் | பிளாஷ்பேக்: வில்லத்தனத்தில் மிரட்டி, வறுமையில் வாடிய நடிகை | ஐமேக்ஸ் தியேட்டர்கள் : 'ஜனநாயகன், தி ராஜா சாப்' படங்களுக்குப் புதிய சிக்கல் |

நடிகர் பரத் ஹீரோ தாண்டி பிற நடிகர்கள் படங்களிலும் நடிக்க தொடங்கி உள்ளார். சமுத்திரகனி உடன் வீர வணக்கம் படத்தில் நடிப்பவர் அடுத்து சசிகுமார் உடன் ஒரு படத்தில் நடிக்கிறார். குடும்ப உறவுகளின் வலிமையை உணர்த்தும் விதமாக உருவாகும் இப்படத்தில் மேகா செட்டி, மாளவிகா ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடிக்கிறார். இவர்களுடன் எம் எஸ் பாஸ்கர், ஆடுகளம் நரேன், கஞ்சா கருப்பு, இந்துமதி ஜோ மல்லூரி ஆகியோர் நடிக்க உள்ளனர். பெயரிடப்படாத இப்படத்தை குரு என்பவர் இயக்குகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் 10ம் தேதி அன்று பட்டுக்கோட்டையில் துவங்குகிறது. இதன் படப்பிடிப்பு பட்டுகோட்டை, மன்னார்குடி, முத்துப்பேட்டை, தஞ்சாவூர், வேதாரணியம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர்.




