நாம ‛குட்'-ஆ இருந்தாலும் உலகம் ‛பேட்'-ஆக்குது : குட் பேட் அக்லி டீசர் வெளியானது | வாரிசு பட நடிகையான சம்யுக்தா விவாகரத்து | சசிகுமார் படத்தில் பரத் | கிங்ஸ்டன்-ல் விஷுவல் டிரீட் : திவ்ய பாரதி | தமிழைத் தொடர்ந்து தெலுங்கில் அறிமுகமாகும் அனுராக் காஷ்யப் | மார்ச் முதல் வாரத்தில் மீண்டும் படப்பிடிப்பு தளத்துக்கு வரும் சிவராஜ்குமார் | 110 கிலோ : மிரள வைக்கும் சமந்தாவின் ஒர்க்அவுட் | டிராகன் வெற்றியை கொண்டாடிய LIK படக்குழு | நயன்தாராவிற்கு வில்லனாக அருண் விஜய்? | 'கிங்ஸ்டன்' நம்ம ஊரு 'ஹாரிபார்ட்டர்' : ஜி.வி.பிரகாஷ் |
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பஹத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் புஷ்பா. இதே கூட்டணியில் இதன் இரண்டாம் பாகமும் வெளியாகி ரூ.1800 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. இந்நிலையில் இந்த படத்தால் பள்ளி குழந்தைகள் கெட்டு போகின்றனர் என ஆசிரியை ஒருவர் குற்றம் சாட்டி உள்ளார்.
மாணவர்களின் நடத்தை பற்றி தெலுங்கானா அரசு பள்ளி ஆசிரியர்கள், மாநில கல்வி ஆணையத்துடன் ஆலோசனை நடத்தினர். இதில் பங்கேற்ற ஒரு ஆசிரியை கூறும்போது, ‛‛அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படத்தை பார்த்த பின் பள்ளிக் குழந்தைகள் கெட்டு போய் உள்ளனர். மாணவர்களும் அந்த படத்தில் வருவதுபோன்று மோசமான ஹேர்ஸ்டைல் மற்றும் ஆபாசமாக பேசுகின்றனர்.
அரசு பள்ளி மட்டுமல்ல, தனியார் பள்ளிகளிலும் இதே நிலை தான் உள்ளது. பெற்றோர்களும் இதுபற்றி கொஞ்சம் கூட கவலைப்படுவது கிடையாது. இந்த படத்திற்கு எதன் அடிப்படையில் சென்சார் சான்று கொடுத்தார்கள் என தெரியவில்லை. இதையல்லாம் பார்க்கையில் ஒரு ஆசிரியையாக நான் தோற்றது போன்று உள்ளது''.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.