நாம ‛குட்'-ஆ இருந்தாலும் உலகம் ‛பேட்'-ஆக்குது : குட் பேட் அக்லி டீசர் வெளியானது | வாரிசு பட நடிகையான சம்யுக்தா விவாகரத்து | சசிகுமார் படத்தில் பரத் | கிங்ஸ்டன்-ல் விஷுவல் டிரீட் : திவ்ய பாரதி | தமிழைத் தொடர்ந்து தெலுங்கில் அறிமுகமாகும் அனுராக் காஷ்யப் | மார்ச் முதல் வாரத்தில் மீண்டும் படப்பிடிப்பு தளத்துக்கு வரும் சிவராஜ்குமார் | 110 கிலோ : மிரள வைக்கும் சமந்தாவின் ஒர்க்அவுட் | டிராகன் வெற்றியை கொண்டாடிய LIK படக்குழு | நயன்தாராவிற்கு வில்லனாக அருண் விஜய்? | 'கிங்ஸ்டன்' நம்ம ஊரு 'ஹாரிபார்ட்டர்' : ஜி.வி.பிரகாஷ் |
இயக்குனர் அட்லி ஹிந்தியில் ஷாரூக்கானின் ஜவான் படத்தை இயக்கி சூப்பர் ஹிட்டாக்கினார். தொடர்ந்து சல்மானின் படத்தை இயக்க இருந்தார். பட்ஜெட் பிரச்னையால் இப்போது அந்த படம் அல்லு அர்ஜுன் பக்கம் சென்றுள்ளது. இதனிடையே படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். தனது தெறி படத்தை ஹிந்தியில் பேபி ஜான் என்ற பெயரில் தயாரித்தார். ஆனால் படம் தோல்வி அடைந்துவிட்டது.
இந்நிலையில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை அட்லி அவரது ஏ பார் ஆப்பிள் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பை வரும் மார்ச் மாதத்தில் சென்னையில் துவங்குகின்றனர். தொடர்ந்து இரண்டு - மூன்று மாதங்களில் படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
விஜய் சேதுபதி தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துள்ளார்.