விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

பிஜேஎஸ் பிலிம்ஸ் சார்பில் ஜேசன் சாமுவேல் தயாரிக்கும் படம் 'மடல்'. சிலநேரங்களில் சில மனிதர்கள், அன்பிற்கினியாள் போன்ற படங்களில் நடித்த பிரவீன் ராஜா இந்த படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார். சந்தானம் நடித்த 'இங்க நாங்க தான் கிங்கு' படத்தில் கதாநாயகியாக நடித்த பிரியாலயா நாயகியாக நடிக்கிறார். மற்றும் நிழல்கள் ரவி, பாலசரவணன், விவேக் பிரசன்னா, கிருஷ்ணதயாள் ஆகியோருடன் மற்றும் பலர் நடிக்கின்றனர். ஸ்ரீகாந்த் ஒளிப்பதிவு செய்கிறார், சுனில் இசை அமைக்கிறார்.
ஹரிசங்கர் ரவீந்திரன் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறும்போது, "ஹிஸ்டாரிக்கல் கலந்த ஹாரர் படம் இது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்றில் நடந்த நம் தமிழ் கலாச்சாரம் பற்றிய ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த திரைக்கதையை உருவாக்கியுள்ளோம். தமிழ் சினிமாவில் ஹாரரில் இதுவரை யாரும் நெருங்காத புதிய கதைக்களத்தை இந்த படத்தில் பார்க்கலாம். ரசிகர்களுக்கு ஒரு புது அனுபவத்தை தரும்" என்றார்.