மனைவியுடன் இணைந்து நடிப்பேன் : ஆதி | தயாரிப்பாளர்களுக்கு அடுக்குமாடி கட்டிடம் : அரசாணை புதுப்பிப்பு | கபில் சர்மா சம்பளம் 5 கோடி? | சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை: ஷங்கரின் விளக்கம் என்ன? | டிக்கெட் கட்டணம், இரட்டை வரி விதிப்பில் மாற்றம் வருமா? | தியேட்டரில் வெளியாகும் அனுஷ்காவின் 'காதி' டிரைலர் | சவுரவ் கங்குலி பயோபிக் படத்தில் ராஜ்குமார் ராவ் | ஏ.ஆர்.ரஹ்மானின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த சாய்ரா பானு! | மூன்று நாட்கள் மவுன விரதம் கடைபிடித்த சமந்தா! | 'டிராகன்' - பெயருக்காக எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா….. |
தமிழ் சினிமாவில் சில நடிகைகள் தொடர்ந்து நடிக்கவில்லை என்றாலும் அவர்களது ஒரு சில படங்களோ, அல்லது கதாபாத்திரங்களோ மனதில் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கும். அப்படி ஒரு நடிகையாக 'பருத்தி வீரன்' படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார் பிரியாமணி. ஹிந்தி நடிகை வித்யா பாலனின் நெருங்கிய உறவினர்.
2004ம் ஆண்டு பிப்ரவரி 20ம் தேதி வெளியான 'கண்களால் கைது செய்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மாடலிங் செய்து கொண்டிருந்தவரை முதன் முதலில் சினிமாவுக்கு அழைத்து வந்தவர் இயக்குனர் பாரதிராஜா. அப்படம் முடிந்தும் தாமதமாகவே வந்தது. அதற்கும் முன்னதாக பிரியமணி நடித்த தெலுங்குப் படமான 'எவரே அலகாடு' படம் வெளிவந்தது.
அமீர் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக அறிமுகமான 'பருத்தி வீரன்' படத்தில் முத்தழகு என்ற கிராமத்து இளம் பெண் கதாபாத்திரத்தில் நடித்தார் பிரியாமணி. அவரது நடிப்பும், பேச்சும், தோற்றமும் தமிழ் சினிமாவின் சிறந்த பெண் கதாபாத்திரங்களில் ஒன்றாக அந்த முத்தழகு கதாபாத்திரத்தைப் பேச வைத்தது, மறக்க முடியாமலும் செய்தது.
அதன்பின் தமிழில் சரியான வாய்ப்புகள் அவருக்குக் கிடைக்கவில்லை. இருந்தாலும், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் பல தரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்தார். தற்போது விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மலையாளத்தில் அவர் நடித்துள்ள 'ஆபீசர்' படம் இன்று வெளியாகிறது. இப்படத்திற்கான பிரமோஷன் நிகழ்வுகளில் கலந்து கொள்ள தற்போது மும்பையில் இருக்கிறார்.